அரும்பாக்கம் வங்கிக் கொள்ளை வழக்கில் சிக்கிய 6 பேருக்கு குண்டாஸ்!

அரும்பாக்கம் வங்கிக் கொள்ளை வழக்கில் சிக்கிய 6 பேருக்கு குண்டாஸ்!

அரும்பாக்கம் வங்கிக் கொள்ளை வழக்கில் கைதான 6 நபர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது.

சென்னை அரும்பாக்கத்தில் உள்ள பெட் கோல்டு லோன் வங்கியில் கடந்த மாதம் 13-ம் தேதி 31.7 கிலோ தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது. இந்த வங்கியில் பணியாற்றிய ஊழியர் முருகனே தனது கூட்டாளியுடன் திட்டமிட்டு வங்கிக்குள் புகுந்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதையடுத்து, முக்கிய கொள்ளையன் முருகன், சூர்யா, பாலாஜி, சந்தோஷ், செந்தில்குமார், ஸ்ரீவத்சவா, அச்சரப்பாக்கம் காவல் ஆய்வாளர் அமல்ராஜ், கேப்ரியல் உள்ளிட்ட 8 பேரை போலீஸார் கைது செய்து அவர்களிடம் இருந்து 31.7 கிலோ தங்க நகைகளை மீட்டதுடன் கொள்ளைக்கு பயன்படுத்திய கார் மற்றும் இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்து அவர்களை சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில் இந்த வங்கி கொள்ளை வழக்கில் கைதான முருகன், ஸ்ரீவத்சவா, சூர்யா, செந்தில்முருகன், சந்தோஷ், பாலாஜி ஆகிய ஆறு பேரை குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்து காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in