ஆருத்ரா நிதி நிறுவன ஏஜென்ட் தற்கொலை: 6 நாளில் திருமணம் நடக்க இருந்த நிலையில் சோகம்

ஆருத்ரா நிதி நிறுவன ஏஜென்ட் தற்கொலை: 6 நாளில் திருமணம் நடக்க இருந்த நிலையில் சோகம்

திருமணம் நடக்க இன்னும் 6 நாட்களில் இருந்த நிலையில் காஞ்சிபுரம் அருகே ஆருத்ரா நிதி நிறுவன ஏஜென்ட் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை உள்பட தமிழ்நாடு முழுவதும் பல கிளைகளைக் கொண்டது ஆருத்ரா கோல்டு நிறுவனம். இந்நிறுவனத்தின் தலைமை அலுவலகம் சென்னை அமைந்தகரையில் உள்ளது. ஆருத்ரா கோல்டு டிரேடிங் என்ற நிறுவனம், தங்களது நிறுவனத்தில் முதலீடு செய்பவர்களுக்கு மாதம் தோறும் 10 சதவீதம் முதல் 30 சதவீதம் வரை வட்டி தருவதாக விளம்பரம் செய்து, சுமார் 1,678 கோடி ரூபாய் வரை வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், பொதுமக்களிடம் வசூலித்த டெபாசிட் பணத்தை குறிப்பிட்ட காலத்தில் திருப்பி வழங்காமல் இழுத்தடித்ததால், இந்த விவகாரம் பிரச்சினையை ஏற்படுத்தியது. இது தொடர்பான வழக்கு தற்போது நடைபெற்று வருகிறது.

இந்த நிறுவனத்தில் காஞ்சிபுரம் அருகே உள்ள கோவிந்தவாடியைச் சேர்ந்த விஜயபாஸ்கர் ஏஜென்டாக இருந்தார். இவர் அவர் பகுதியில் உள்ள பொதுமக்களிடம் லட்சக்கணக்கில் பணம் வசூல் செய்து ஆருத்ரா நிறுவனத்தில் செலுத்தியதாக கூறப்படுகிறது. பணத்தைக் கட்டியவர்கள் திரும்பித் தரச்சொல்லி விஜயபாஸ்கரை நெருக்கடி தந்துள்ளனர். இந்த நிலையில் செப்.1-ம் தேதி விஜயபாஸ்கருக்கு திருமணம் நிச்சயம் செய்யப்பட்டது.

இந்த நிலையில் அவரிடம் பணம் கட்டியவர்கள் உடனடியாக பணம் வேண்டும் என்று வலியுறுத்தியதாலும், திருமணத்திற்கு பணம் இல்லாத காரணத்தாலும் விஜயபாஸ்கர் மனஉளைச்சலில் இருந்துள்ளார். இந்த நிலையில் இன்று பிற்பகல் வீட்டில் அவர் தற்கொலை செய்து கொண்டார். திருமணமாக இன்னும் 6 நாளே உள்ள நிலையில் வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in