அச்சன்கோயில் ஐயப்பனுக்கு அணிவிக்க ஆபரணங்கள் வருகை!

அச்சன்கோயில் ஐயப்பனுக்கு அணிவிக்க ஆபரணங்கள் வருகை!

தென்காசி மாவட்டம், மேக்கரை அருகில் உள்ள அச்சன்கோயில் ஐயப்பனுக்கு அணிவிக்க ஆபரணங்கள் வந்தன. வழிநெடுகிலும் ஐயப்ப பக்தர்கள் திரண்டு இருந்து பக்திப் பெருக்கோடு உற்சாக வரவேற்புக் கொடுத்தனர்.

தமிழக -கேரள எல்லையான கேரள மாநிலம் புனலூரில் இருந்து ஆண்டு தோறும் தென்காசி மாவட்டம் மேக்கரை அருகில் உள்ள அச்சன்கோயிலில் உள்ள ஐயப்பன் கோயிலுக்கு மார்கழி மாத மஹா உத்சவ் 10 நாள் திருவிழாவை முன்னிட்டு சுவாமி ஐயப்பனுக்கு அணிவிப்பதற்காக விலை உயர்ந்த தங்க வைர ஆபரணங்கள் கொண்டு வந்து அணிவிப்பது வழக்கம்.

இதன் தொடர்ச்சியாக இன்று புனலூர் அரசு கருவூலத்தில் இருந்து அச்சன்கோயில் ஐயப்பனுக்கு அணிப்பதற்காக ஆபரணங்கள் எடுத்துவரப்பட்டு புனலூர் பார்த்தசாரதி ஆலயத்தில் வைத்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதன் தொடர்ச்சியாக அங்கு பொதுமக்களின் தரிசனத்திற்கு பின்பு ஆபரணப் பெட்டிகள் அச்சன்கோயில் ஐயப்பன் கோயிலுக்கும், ஆரியங்காவு ஐயப்பன் கோயிலுக்கும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஊர்வலமாக எடுத்து வரும் பணி தொடங்கியது. இந்த ஆபரண பெட்டி ஆரியங்காவு, புளியரை, காலங்கரை, செங்கோட்டை, தென்காசி பைம்பொழுவில் வழியாக மேக்கரைக்கு கொண்டு செல்லப்படுவது வழக்கம்.

இதனை முன்னிட்டு வழிநெடுகிலும் அச்சன்கோயில் ஆபரண பெட்டிக்கு உற்சாக வரவேற்பு அளிப்பதற்காக ஐயப்ப பக்தர்கள் அதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளனர். மேலும் அச்சன்கோயிலுக்கு எடுத்துவரும் ஆபரண பெட்டி பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கொண்டுவரும் பணியும் தொடங்கியுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in