கடைக்குள் புகுந்து பூக்கடைக்காரருக்கு சரமாரி வெட்டு: இளம் சிறார்கள் 4 பேர் கைது

பூக்கடைக்காரரை வெட்டிய 4 இளம் சிறார்கள் கைது
பூக்கடைக்காரரை வெட்டிய 4 இளம் சிறார்கள் கைதுகடைக்குள் புகுந்து பூக்கடைக்காரருக்கு சரமாரி வெட்டு: இளம் சிறார்கள் 4 பேர் கைது

தாயைத் திட்டியதால் நண்பர்களுடன் சேர்ந்து பூக்கடைக்காரரை வெட்டிய 4 இளம் சிறார்களைப் போலீஸார் கைது செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை பரங்கிமலை ரயில் நிலையம் அருகில் பாண்டியம்மன் கோயில் தெருவில் பூக்கடை நடத்தி வருபவர் கார்த்தி(34), நேற்று மாலை இவரது கடைக்குள் புகுந்த 4 பேர் கொண்ட கும்பல் கத்தி மற்றும் கட்டையால் சரமாரியாகத் தாக்கியது. இதில் கார்த்திக், மற்றும் அஜித் ஆகிய இருவரையும் கத்தியால் வெட்டியதில் அவர்களுக்கு தலை, கால், கை உள்ளிட்ட இடங்களில் பலத்தக் காயம் ஏற்பட்டது.

இதையடுத்து அவர்களை மீட்டு அக்கம்பக்கத்தினர் அரசு ராஜூவ் காந்தி அரசு மருத்துவமனை அனுப்பி வைத்தனர். பூக்கடையில் புகுந்து வெட்டியவர்களைக் கைது செய்யக்கோரி கார்த்திக் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர், இதனால் அரை மணி நேரம் போக்குவரத்துப் பாதிக்கப்பட்டது.

அவர்களுடன் போலீஸார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். வெட்டியவர்களைக் கைது செய்வதாகக் கூறியதன் பேரில் மறியல் கைவிடப்பட்டது. போலீஸார் நடத்திய விசாரணையில், கார்த்திக் மாமியார் ராதா என்பவர் பரங்கிமலை ரயில் நிலைய வாயில் முன் காய்கறி கடை வைத்துள்ளார்.

அதற்கு அருகில் லட்சுமி என்பவரும் காய்கறிக் கடைப் போட்டுள்ளார். ரயில் நிலையத்தில் இருந்து வருபவர்கள் செல்ல இடையூறாக இருந்ததால் ராதா, லட்சுமியிடம் கடையைக் கொஞ்சம் தள்ளிப் போட சொல்லிக் காலை முதல் பிரச்சினை ஏற்பட்டுள்ளது.

இது தொடர்பாக ஆதம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காததால் பிரச்சினை நீடித்துள்ளது அதன் எதிரொலியாகத் தான் கார்த்திக் வெட்டப்பட்ட சம்பவம் நடந்தது தெரிய வந்தது. இதையடுத்து தப்பியோடிய நபர்களைப் பிடிக்க ஆதம்பாக்கம் ஆய்வாளர் வீரமணி தலைமையில் இரண்டு தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்கள் இவ்வழக்கில் தொடர்புடைய 4 இளம் சிறார்களைக் கைதுச் செய்தனர்.

தாயைத் திட்டியதால் நண்பர்களோடு சேர்ந்து வெட்டியதாக அவர்கள் வாக்குமூலம் அளித்துள்ளார். அவர்கள் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து ஆதம்பாக்கம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in