பள்ளியின் கழிவுநீர் குழாயை அடித்து நொறுக்கிய ராணுவ வீரர்: கைது செய்து எச்சரித்து ஜாமீனில் விட்டது போலீஸ்

கைது
கைது

கன்னியாகுமரி மாவட்டம், குலசேகரம் பகுதியில் பள்ளியின் கழிவு நீர் குழாயை சேதப்படுத்தியதாக ராணுவ வீரர் கைது செய்யப்பட்டார்.

கன்னியாகுமரி மாவட்டம், குலசேகரம் பகுதியில் எஸ்.ஆர்.கே.பி என்னும் அரசு உதவி பெறும் பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு கூடைத்தூக்கி படநிலம் பகுதியை சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவர் பள்ளியின் மேலாண்மைக் குழுத் தலைவராக உள்ளார். இந்தப் பள்ளிக்கூடத்தில் கழிவு நீர் குழாயை சீரமைக்கும் பணி நடந்துவருகிறது. இதை ராதாகிருஷ்ணன் மேற்பார்வை செய்துவந்தார்.

அப்போது ராணுவத்தில் பணியாற்றி, விடுமுறைக்காக ஊருக்கு வந்திருக்கும் மணலிவிளையைச் சேர்ந்த மணிகண்டன்(38) என்பவர் அங்கு வந்தார். அவர் பள்ளியில் கழிவு நீர் குழாயை சீரமைத்த தொழிலாளர்களை பணிசெய்ய விடாமல் தடுத்தார். மேலும் அங்கு இருந்த ராதாகிருஷ்ணனையும் திட்டினார். அப்போது மணிகண்டன் குழாய்களையும் உடைத்துள்ளார். இதுகுறித்து ராதாகிருஷ்ணன் குலசேகரம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இதன் பேரில் மணிகண்டனை கைது செய்த போலீஸார் தொடர்ந்து அவரை ராணுவ வீரர் என்பதால், சொந்த ஜாமீனில் விடுவித்து, கடுமையாக எச்சரித்து அனுப்பினர்.

ராணுவ வீரர் பைப்பை உடைத்த வழக்கில் கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in