3 ராணுவ வீரர்கள் பலி: காஷ்மீர் பள்ளத்தாக்கில் துயரம்

3 ராணுவ வீரர்கள் பலி: காஷ்மீர் பள்ளத்தாக்கில் துயரம்

ஜம்மு காஷ்மீரின் பனிமலை பள்ளத்தாக்கு பகுதியில் 3 ராணுவ வீரர்கள், விழுந்து இறந்ததாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.

வடக்கு காஷ்மீரின் குப்வாரா பகுதியின் மாச்சல் செக்டாரில் இந்த சம்பவம் நடந்திருக்கிறது. வழக்கமான பயிற்சி நடவடிக்கைகளுக்காக சென்றபோது, பனிமலையின் குறுகிய பள்ளத்தாக்கில் வாகனம் கவிழ்ந்து 3 ராணுவ வீரர்கள் பலியாகி உள்ளனர். நேற்றைய தினம் நிகழ்ந்த இந்த துயரத்தை அடுத்து, இன்று இந்திய ராணுவம் 3 வீரர்களின் மரணத்தை உறுதி செய்துள்ளது.

எல்லை கட்டுப்பாட்டு கோட்டுக்கு சற்று அருகே, டோக்ரா ரெஜிமெண்டின் 14வது பட்டாலியனை சேர்ந்த வீரர்கள், வழக்கமான பயிற்சிக்கு சென்றனர். அப்போது ஏற்பட்ட விபத்தில் 3 வீரர்களும் குறுகிய மற்றும் ஆழமான பள்ளத்தாக்கு பகுதியில் விழுந்து இறந்துள்ளனர். வீர மரணமடைந்தவர்களின் சடல எச்சங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. கடும் பனிப்பொழிவு இந்த துயர சம்பவத்துக்கு வித்திட்டிருப்பதாக சொல்லப்படுகிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in