ஆயுதங்களுடன் ஊர்களில் புகுந்து கொள்ளை: நள்ளிரவில் கும்பல் செல்லும் அதிர்ச்சி சிசிடிவி காட்சி

ஆயுதங்களுடன் ஊர்களில் புகுந்து கொள்ளை: நள்ளிரவில் கும்பல் செல்லும் அதிர்ச்சி சிசிடிவி காட்சி

நள்ளிரவு நேரத்தில் பயங்கர ஆயுதங்களுடன் ஊர்களில் புகுந்து ஆயுதங்களுடன் கும்பல் கொள்ளையடித்து வருகிறது. தற்போது வெளியாகியுள்ள சிசிடிவி காட்சி வெளியாகி அனைவரையும் பதற வைத்துள்ளது.

கோவை மாவட்டம், கருமத்தம்பட்டி, சங்கோதி பாளையம், செல்லப்பம்பாளையம் ஆகிய ஊர்களில் உள்ள தோட்டங்களில் பல்வேறு வீடுகளில் இருந்து வருகிறது. இந்த வீடுகளை தற்போது கொள்ளையர்கள் குறிவைத்து திருடி வருகின்றனர். கருமத்தம்பட்டி கிராமத்தில் ஆயுதங்களுடன் புகுந்த கொள்ளையர்கள் அங்குள்ள வீட்டின் கூரையைப் பிரித்து உள்ளே சென்று திருடி செல்லும் சிசிடிவி காட்சி தற்போது வெளியாகி அனைவரையும் அதிர்ச்சிடைய வைத்துள்ளது.

மேலும் அங்குள்ள வடமாநில இளைஞரின் செல்போனையும் அந்த கும்பல் திருடி சென்றிருக்கிறது. இது குறித்து கருமத்தம்பட்டி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து கொள்ளை கும்பலையே தேடி வருகின்றனர். நள்ளிரவு நேரத்தில் ஊர்களில் புகுந்து கொள்ளையடிக்கும் கும்பலால் அந்த பகுதி மக்கள் அதிர்ச்சியில் இருக்கிறார்கள்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in