9 வயது சிறுமியை மிரட்டி பலமுறை பாலியல் பலாத்காரம்: முதியவருக்கு ஆயுள்தண்டனை

கருணாநிதி
கருணாநிதி

அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலத்தில் ஒன்பது வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த முதியவருக்கு ஆயுள்தண்டனை விதித்து மகளிர் நீதிமன்றம்  தீர்ப்பு வழங்கியுள்ளது.

அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே விக்கிரமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த கலியன் (எ) கருணாநிதி(54). இவர்,  அதே கிராமத்தைச் சேர்ந்த 8 வயது சிறுமியை கடந்த ஜூலை மாதத்தில் மிரட்டி பலமுறை  பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். 

இதுகுறித்து தகவல் தெரிந்ததும்  சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், விக்கிரமங்கலம் போலீஸார் போக்சோ சட்டத்தில் கருணாநிதியை கைது செய்தனர். இதுதொடர்பான வழக்கு அரியலூர் மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.  இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்கறிஞர் ம.ராஜா ஆஜரானார்.

வழக்கை  விசாரித்த நீதிபதி ஆனந்தன், விசாரணை முடிவடைந்த நிலையில், கருணாநிதியின் குற்றத்தை உறுதிசெய்து அவருக்கு ஆயுள் தண்டனையும், ரூ.11,000 அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.  மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.7 லட்சம் நிவாரணத்தொகை அரசு சார்பில்  வழங்கவும் உத்தரவிட்டார். 

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in