2 குந்தைகளைக் கிணற்றில் வீசிக்கொன்று தாயும் தற்கொலை: கணவருடன் ஏற்பட்ட தகராறால் விபரீதம்

2 குந்தைகளைக் கிணற்றில் வீசிக்கொன்று தாயும் தற்கொலை: கணவருடன் ஏற்பட்ட தகராறால் விபரீதம்

தென்காசி மாவட்டத்தில் குடும்பத் தகராறில் தன் இரு குழந்தைகளைக் கொலை செய்துவிட்டுத் தாய் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தென்காசி மாவட்டம், ஆத்துவழி பள்ளிக்கூடத் தெருவைச் சேர்ந்தவர் முருகன்(32) லாரி டிரைவரான இவர், அப்பகுதியில் உள்ள கல்குவாரி ஒன்றில் வேலைசெய்து வருகிறார். இவரது மனைவி மீனா(27) காதலித்துத் திருமணம் செய்துகொண்ட இந்தத் தம்பதிகளுக்கு தியா முபீனாள்(6), முகிஷா முபினாள்(2) என இரு பெண்குழந்தைகள் உள்ளனர்.

காதல் திருமணம் செய்த இந்த ஜோடிக்குள் அண்மைக்காலமாக கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் இருவருக்குள்ளும் அவ்வப்போது சண்டை ஏற்பட்டுவந்தது. நேற்றும் அதேபோல் இரவு சண்டை வந்தது. இதனால் முருகன் வீட்டைவிட்டுச் சென்றுவிட்டார். சிறிதுநேரம் கழித்து அவர் திரும்பிவந்தார்.

அப்போது வீட்டில் தன் மனைவி, இருகுழந்தைகளையும் காணவில்லை. அக்கம், பக்கத்து வீடுகளில் விசாரித்தபோதும் அவர்கள் அங்கு செல்லவில்லை எனத் தெரியவந்தது. சிறிதுநேரம் கழித்து அருகில் உள்ள தோட்டத்தில் உள்ள கிணற்றில் முருகனின் மூத்த மகள் தியாவின் சடலம் கிடப்பது தெரியவந்தது. கடையநல்லூர் போலீஸார் மேற்பார்வையில் தீயணைப்புத் துறையினர் கிணற்றில் தேடியபோது அங்கு இரண்டாவது மகள் முகிஷா, மனைவி மீனா ஆகியோரின் சடலங்களும் மீட்கப்பட்டது.

குடும்பப் பிரச்சினையில் தாய் மீனா, தன் இருகுழந்தைகளையும் கிணற்றில் வீசிக் கொலை செய்துவிட்டுத் தானும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in