மனைவி என்னை காயப்படுத்திவிட்டாள்; போதையில் சாலையில் உருண்ட எல்ஐசி ஊழியர்: குண்டுகட்டாக தூக்கிச்சென்ற போலீஸ்

மதுரை பெரியார் பஸ் நிலையம்
மதுரை பெரியார் பஸ் நிலையம்

மனைவியுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக போதையில் சாலையில் உருண்ட எல்.ஐ.சி ஊழியரால் மதுரை பெரியார் பேருந்து நிலைய பகுதியில் பரபரப்பு நிலவியது.

மதுரை எல்.ஐ.சி நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வருபவர் கார்த்திக். இவர் தனது மனைவியுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக அளவுக்கு அதிகமாக மது குடித்துள்ளார். இதனால் போதையின் உச்சத்தை தொட்ட கார்த்திக், பரபரப்பு மிகுந்த பெரியார் பேருந்து நிலைய சாலையில் வாகனங்களுக்கு இடையே படுத்து உருண்டபடி இருந்துள்ளார்.

இதனை கண்ட வாகன ஓட்டிகள் இது குறித்து போக்குவரத்து போலீஸாரிடம் தகவல் தெரிவித்துள்ளனர். இதையடுத்து அங்கு வந்த போலீஸார், கார்த்திக்கை சாலையில் இருந்து எழுந்து வரும் படி கோரினர். ஆனால் போலீஸாரின் எச்சரிக்கை எதையும் காதில் வாங்காத கார்த்திக் தொடர்ந்து சாலையில் படுத்து உருண்டார்.

இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்ட நிலையில் போலீஸாரை அலைக்கழித்த கார்த்திக்கை குண்டுகட்டாக தூக்கி சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் கார்த்திக், தனது மனைவியுடன் ஏற்பட்ட தகராறினை தொடர்ந்து கண்ணாடியில் அடித்ததால் கையில் காயம் ஏற்பட்டுள்ளதாக கூறியுள்ளார். அவரிடம் ஓட்டுநர் லைசென்ஸ் குறித்து போலீஸார் கேட்ட போது, போன வாரம் தெப்பக்குளம் போலீஸார், குடிபோதையில் வாகனம் ஓட்டி வந்ததாக கூறி என்னோட ஓட்டுநர் லைசென்ஸை வாங்கிக் கொண்டனர் என சொல்லி அதிர வைத்தார்.

இதையடுத்து போலீஸார், கார்த்திக்கை அங்கிருந்து அப்புறப்படுத்தி அனுப்பினர். போதை வாலிபரின் செயலால் ஒரு மணிநேரம் பரப்பு மிகுந்த பெரியார் பேருந்து நிலைய சாலையில் மேலும் பரபரப்பு உண்டானது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in