ஹோட்டலில் சாப்பிட வந்தபோது தகராறு; கொடூரமாக கொல்லப்பட்ட சர்வர்: தூத்துக்குடியில் பயங்கரம்

கொலை
கொலை

தூத்துக்குடியில் உணவகத்தில் சாப்பிட வந்தபோது வாடிக்கையாளருடன் ஏற்பட்ட தகராறில் சர்வர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள முடிவைத்தானேந்தல் ஓதுவார் தெருவைச் சேர்ந்தவர் பொன் செந்தில். இவர் தூத்துக்குடியில் கருப்பசாமி என்பவர் நடத்திவரும் உணவகத்தில் சர்வராக வேலைசெய்து வந்தார். கடந்த 4-ம் தேதி, இவர்கள் உணவகத்தில் சாப்பிட வந்த சிலருக்கும், இந்தக் கடையில் பணி செய்யும் பொன் செந்தில் உள்ளிட்ட தொழிலாளர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. பின்பு இருதரப்புக்கும் சமரசமும் ஏற்பட்டது.

இந்நிலையில் நேற்று இரவு வழக்கம்போல் கடையைப் பூட்டியதும் தன் கடை உரிமையாளர் கருப்பசாமியுடன், அவரது மோட்டார் சைக்கிளில் பொன் செந்தில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். தூத்துக்குடி ஆசிரியர் காலணி அருகே சென்றபோது, பின்னால் இரண்டு மோட்டார் சைக்கிளில் சென்ற ஆறுபேர் கொண்ட கும்பல், அவர்களை வழிமறித்து பொன் செந்திலை சரமாரியாக வெட்டிக் கொலை செய்தது. இதுகுறித்து தென்பாகம் போலீஸார் வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களைத் தேடிவருகின்றனர்.

மேலும், பொன் செந்தில் கொலைக்கும், உணவகத்தில் நடந்த தகராறுக்கும் தொடர்பு இருப்பதாக சந்தேகிக்கும் போலீஸார் அப்பகுதியின் சிசிடிவி காட்சிகளைக் கைப்பற்றி விசாரித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in