மனைவியை அவதூறாக பேசினார்: நண்பனை கொடூரமாகக் கொன்ற வாலிபர்: ஒன்றாக மது அருந்தியபோது விபரீதம்

கொலை
கொலைஒன்றாக மது அருந்தியபோது தகராறு: நண்பனைக் கொலை செய்துவிட்டு வாலிபர் தலைமறைவு

ஒன்றாக மது அருந்திய போது ஏற்பட்ட தகராறில் சக நண்பனைக் கொலை செய்துவிட்டு வாலிபர் தலைமறைவான சம்பவம் திசையன்விளைப் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

நெல்லை மாவட்டம், திசையன்விளை அருகில் உள்ள கூட்டப்பனை பகுதியைச் சேர்ந்தவர் சுபாஷ் என்ற மணி(26). மீன்பிடித் தொழில் செய்துவருகிறார். இதேபகுதியைச் சேர்ந்த ராஜாவும்(28) மீன்பிடித் தொழில் செய்துவருகிறார். இவர்கள் இருவரும் நண்பர்கள். இதனால் இருவரும் அடிக்கடி சேர்ந்து மது குடிக்கும் பழக்கமும் கொண்டு இருந்தனர். இதில் ராஜா மீது பல்வேறு காவல் நிலையங்களில் ஏராளமான வழக்குகள் உள்ளன. குண்டர் சட்டத்திலும் கைது செய்யப்பட்ட ராஜா அண்மையில் தான் தண்டனைகாலம் முடிந்து வெளியே வந்தார்.

வழக்கம் போல் சுபாஷும், ராஜாவும் அப்பகுதியில் உள்ள ஒரு காட்டுப்பகுதியில் அமர்ந்து நேற்று இரவு மது அருந்தினர். அப்போது ஏதோ வாக்குவாதம் ஏற்பட்டு சுபாஸ் ராஜாவை வெறும் கையால் தாக்கியுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த ராஜா வீட்டுக்குப் போய் அரிவாள் எடுத்துவந்து தன் உறவினர்கள் சிலரோடு சேர்ந்து வெட்டிச்சாய்த்தார். இதில் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே சுபாஷ் உயிர் இழந்தார். இன்று காலையில் அந்த வழியாகச் சென்றவர்கள் சுபாஷ் சடலமாகக் கிடப்பதைப் பார்த்துவிட்டு திசையன்விளை போலீஸாருக்குத் தகவல் கொடுத்தனர்.

போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சுபாஷ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும், போலீஸார் நடத்திய முதல்கட்ட விசாரணையில் சுபாஷ் மது போதையில் ராஜாவின் மனைவியை அவதூறாகப் பேசியதாகவும், அதனால் தான் கொலை நடந்ததாகவும் தெரியவந்துள்ளது. தொடர்ந்து தலைமறைவான ராஜாவைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in