நாய் எப்படி குரைக்கலாம் என தகராறு: இருதரப்பு மோதலில் பெண் அடித்துக்கொலை

நாய் எப்படி குரைக்கலாம் என தகராறு: இருதரப்பு மோதலில்  பெண் அடித்துக்கொலை

நாய் குரைத்ததால் ஏற்பட்ட தகராறில் இருதரப்பினர் மோதிக்கொண்டதில் ஒரு பெண் அடித்துக் கொலை செய்யப்பட்ட அதிர்ச்சி சம்பவம் உத்தரப்பிரதேசத்தில் நடைபெற்றுள்ளது.

உத்தரப்பிரதே மாநிலம் பல்லியாவைச் சேர்ந்தவர் லால் முனி(50). இவரது வீட்டில் நாய் வளர்த்து வந்தார். இந்த நாய் அடிக்கடி குரைத்ததால் பக்கத்து வீட்டைச் சேர்ந்தவர்கள் தொல்லையாக இருப்பதாக கூறியுள்ளனர். இதனால் இருவீட்டினரும் அடிக்கடி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். நேற்று முன்தினம் நள்ளிரவு நாய் குரைத்ததால் பக்கத்து வீட்டைச் சேர்ந்த சிவசாகர் பிரசாத், அவரது மகன் அஜித் உள்ளிட்டோருக்கும் லால்முனிக்கும் தகராறு ஏற்பட்டது. அப்போது வாக்குவாதம் முற்றி இருதரப்பினரும் பயங்கரமாக மோதிக்கொண்டனர்.

இதில் லால் முனி உள்பட 6 பேர் படுகாயமடைந்தனர். உடனடியாக அவர்கள் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள், லால்முனி ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மற்ற 5 பேரும் மருத்துவமனையில் காயங்களுடன் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து லால்முனி மகன் அளித்த புகாரின் பேரில் மூன்று பேர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். இச்சம்பவம் தொடர்பாக சிவசாகர், அவரது மகன் அஜித் ஆகியோரை நேற்று கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in