போக்குவரத்து விதி மீறுகிறீர்களா?- இனி QR code மூலம் அபராதம் செலுத்தலாம்!

போக்குவரத்து விதி மீறுகிறீர்களா?- இனி QR code மூலம் அபராதம் செலுத்தலாம்!

போக்குவரத்து விதியை மீறிபவர்கள் QR code மூலம் அபராதம் செலுத்தும் முறையை தொடங்கி வைத்தார் சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால்.

சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் உள்ள கலந்தாய்வு கூடத்தில் இன்று போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடும் வாகன ஓட்டிகள் paytm QR Code ஸ்கேன் செய்து, அபராதம் செலுத்தும் முறையை தொடங்கி வைத்த சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால், போக்குவரத்து காவல் துறையினருக்கு சிறிய அளவிலான QR Code அட்டைகளையும் வழங்கினார்.

இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த காவல் ஆணையர் சங்கர் ஜிவால்,

கடந்த 2018-ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட E-Challan முறையில் அபராதப் பணம் வசூலிப்பதில் பல்வேறு காரணங்களால் சுணக்கம் ஏற்பட்டது. எனினும் போக்குவரத்து அழைப்பு மையங்கள் மூலம் விதிமீறலில் ஈடுபடுவோர்களை அணுகி அபராதத் தொகை வசூலிக்கப்பட்டு வந்தது. E-Chellan முறையில் 21% மட்டுமே அபராதத் தொகை வசூல் செய்யப்பட்டது. போக்குவரத்து அழைப்பு மையங்கள் தொடங்கப்பட்ட பின் அபராத வசூல் 47% ஆக உயர்ந்துள்ளது. எனினும் இன்னும் 50% க்கும் மேற்பட்டோர் விதிமீறலில் ஈடுபட்டு அபராதம் செலுத்தாமல் உள்ளனர். அபராத வசூலை மேம்படுத்த தற்போது Paytm உடன் இணைந்து சென்னை போக்குவரத்து காவல் துறை QR Code மூலம் சம்பவ இடத்திலேயே அபராதத் தொகையை வசூல் செய்யும் முறையை இன்று அறிமுகப்படுத்தி இருக்கிறது.

E-Chellan முறையில் அபராதம் வசூலிக்கும் முறையில் முறைகேடு செய்ததாக பெறப்பட்ட இரு புகார்களில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சென்னை முழுவதும் உள்ள போக்குவரத்து காவல் துறையினருக்கு 300 QRCode அட்டைகள் வழங்கப்பட்டுள்ளது. அபராதத் தொகை மிக குறைவானது என்பதால் நெட்வொர்க் தொடர்பான பிரச்சினைகள் வருவதற்கு சாத்தியக்கூறுகள் குறைவாகவே உள்ளது. இது தவிர விதிமீறலில் ஈடுபட்டவர்களுக்கு தனிப்பட்ட முறையில் விதிமீறல் மற்றும் அதற்கான அபராதத் தொகை அடங்கிய முழு தகவலுடன் குறுஞ்செய்தி அனுப்பும் Bulk SMS முறையும் தொடங்கப்பட்டுள்ளது.

வேப்பேரி கால்நடை மருத்துவமனை மாணவிகள் தற்கொலை முயற்சி விவகாரம் தொடர்பாக கல்லூரியில் சக மாணவிகள், விடுதி கண்காணிப்பாளர் ஆகியோரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. தற்கொலை முயற்சி செய்வதற்கு முன் மாணவிகள் கடிதம் எழுதி வைத்துள்ளனரா என்பது குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது. பாலியல் சீண்டல் தொடர்பாக ஐ.ஐ.டி மாணவி புகார் அளிக்காவிட்டாலும் காவல்துறை தனிப்பட்ட முறையில் விசாரணை நடத்தி பாலியல் சீண்டலில் ஈடுபட்ட நபரை கைது செய்துள்ளது. புகார் இல்லாவிட்டாலும், மாணவி இவ்வழக்கில் பின்னர் சாட்சியாக சேர்க்கப்படுவார்.

பெரியார் சிலை குறித்து அவதூறு கருத்து தெரிவித்த ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கனல் கண்ணன் கருத்துக்கு ஆதரவாகவோ அல்லது மதம் சார்ந்த சர்ச்சைக்குரிய கருத்துகளை சமூக வலைதளங்களில் பதிவிடுவோர் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு அவர்கள் மீதும் சட்டத்திற்குட்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்" என கூறினார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in