தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி பயனாளரா நீங்கள்?: எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தல்

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி  பயனாளரா நீங்கள்?:  எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தல்

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி பயனர்களிடம் தொலைபேசி, சமூக ஊடங்கள், வாட்ஸ்அப் மூலம் வங்கி கணக்கு, ஆதார், பான்கார்டு விவரங்கள் கேட்டால் என்ன செய்ய வேண்டும் என்று எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

தொழிலாளர் வருங்கால வைப்புநிதி அமைப்பானது எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில், ஒருவர் அரசு ஊழியராகவோ அல்லது தனியார் நிறுவனத்தில் பணியாற்றுபவராகவோ இருக்கவேண்டும் என்ற அவசியமில்லை. நீங்கள் வருங்கால வைப்புநிதி அமைப்பில் உறுப்பினராக இருப்பின், மாதந்தோறும் உங்களது பிஃஎப் கழிக்கப்படுகிறது. வருங்கால வைப்பு நிதி வாயிலாக பிஃஎப் பிடித்தம் செய்யப்படும் ஊழியர்களுக்கு இந்த எச்சரிக்கை விடப்படுகிறது.

வருங்கால வைப்பு நிதி அமைப்பு பெயரில் பல்வேறு மோசடிகள் வெளிவந்ததை அடுத்து, சென்ற சில நாட்களாக இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. இதற்கு முன்பாகவும் இது போன்ற எச்சரிக்கை செய்திகள் வெளியிடப்பட்டுள்ளது. எனினும் கடந்த சில தினங்களில் மோசடி வழக்குகள் வேகமாக அதிகரித்துள்ளது. தொலைபேசி, சமூக ஊடகங்கள், வாட்ஸ் அப் ஆகியவற்றின் வாயிலாக வருங்கால வைப்பு நிதி பயனர்களிடமிருந்து பான்கார்டு, ஆதார், யுஏஎன், வங்கிக்கணக்கு மற்றும் ஓடிபி போன்ற தனிப்பட்ட தகவல்களை வருங்கால வைப்பு நிதி அமைப்பு ​​ஒருபோதும் கேட்பதில்லை.

சமூக ஊடகங்கள், வாட்ஸ் அப் ஆகியவற்றின் வாயிலாக எந்தவொரு சேவைக்கும் அல்லது வேறு எதற்கும் எந்த விதமான பணத்தையும் டெபாசிட் செய்ய வருங்கால வைப்பு நிதி அமைப்பு கேட்காது. எனவே வருங்கால வைப்பு நிதி பயனர்கள் அத்தகைய அழைப்பு அல்லது வாட்ஸ் அப் அழைப்புக்கு பதிலளிக்க வேண்டாம் என அறிவுறுத்தப்படுகின்றனர் என்று எச்சரிக்கை விட்டுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in