யுஜிசி நெட் தேர்வு எழுதியவரா நீங்கள்?

யுஜிசி நெட் தேர்வு  எழுதியவரா நீங்கள்?

யுஜிசி நெட் தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட உள்ளதாக தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.

கல்லூரிகள், பல்கலைக்கழங்களில் உதவிப் பேராசிரியர் பணிகள் ஆராய்ச்சி மாணவர் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க நெட் தகுதித் தேர்வு நடத்தப்படுகிறது. இதை என்டிஏ எனப்படும் தேசிய தேர்வு முகமை நடத்தி வருகிறது.

இந்த தேர்வு ஆண்டுக்கு இரண்டு முறை நடத்தப்படுகிறது. இந்த தேர்வில் தேர்ச்சி பெறுபவர்களே அதற்கான பலனைப் பெற முடியும். அதன்படி, நடப்பாண்டு யுஜிசி நெட் தேர்வு நான்கு கட்டங்களாக நடத்தப்பட்டது. இந்த தேர்வுகளுக்கான விடைத்தாள்கள் வெளியிடப்பட்ட நிலையில், யுஜிசி நெட் தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்படும் என தேசிய தேர்வு முகமை அறிவித்து உள்ளது.

இந்த தேர்வு முடிவுகளை www.ugcnet.nta.nic.in மற்றும் www.ntaresults.nic.in என்ற இணையதள பக்கங்களில் பார்த்து தெரிந்து கொள்ளலாம். தேர்வர்கள் தங்களின் விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியை பதிவிட்டு முடிவுகளைத் தெரிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in