வியாபார நிறுவனங்களாக செயல்படுகிறதா ஆதீன மடங்கள்?: ஐகோர்ட் நீதிபதிகள் அதிர்ச்சி

வியாபார நிறுவனங்களாக செயல்படுகிறதா ஆதீன மடங்கள்?:  ஐகோர்ட் நீதிபதிகள் அதிர்ச்சி

ஆதீன மடங்கள் மடங்களா, இல்லை வியாபார நிறுவனங்களா என்று உயர் நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

சேலத்தைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், மதுரை ஆதீனம் மடம் மிகவும் பழமையானது. இந்த மடத்துக்குச் சொந்தமான சொத்துக்கள் தமிழகம் முழுவதும் உள்ளது. திருப்புவனம் தாலுகாவில் ஆதீன மடத்துக்குச் சொந்தமான 1191 ஏக்கர் நிலம் புதுச்சேரியைச் சேர்ந்த தனியார் நிறுவனங்களுக்கு 99 ஆண்டுக்கு குத்தைக்கு வழங்கப்பட்டுள்ளது. அந்த நிலத்தில் தற்போது சட்டவிரோதமாக மணல் அள்ளப்படுகிறது. இதனால் அந்த நிலத்தின் ஒப்பந்தத்தை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.

இந்த மனுவை விசாரித்து நீதிபதிகள் ஆர்.மகாதேவன், ஜெ.சத்யநாராயண பிரசாத் அமர்வு இன்று பிறப்பித்த உத்தரவில், " ஆதீன மடத்தின் சொத்துக்கள் தனியாருக்கு ஒத்திக்கு வழங்கியது அதிர்ச்சி அளிக்கிறது. ஆதீன மடங்கள் மடங்களாக செயல்படுகிறதா? இல்லை வியாபார நிறுவனங்களாக செயல்படுகிறதா? ஆதீன மடத்தின் சொத்துக்களை ஒத்திக்கு விடுவதை எந்த சட்டம் அனுமதிக்கிறது? ஆதீன மடங்கள் அனைத்துமே இந்து அறநிலைத்துறைக்கு கட்டுப்பட்டது. இது போன்ற செயல்களில் ஈடுபட்டால் மடத்தின் மீது நடவடிக்கை எடுக்க இந்து அறநிலையத் துறைக்கு அதிகாரம் உள்ளது.

மனுதாரர் கோரிக்கை தொடர்பாக சிவகங்கை மாவட்ட ஆட்சியர் விசாரித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். அந்த நிலங்களில் சட்டவிரோதமாக மணல் அள்ளப்பட்டு வந்தால் உடனடியாக நிறுத்த வேண்டும். விசாரணை அக். 28-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது" என்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in