`எலி இருக்குது, கரப்பான் பூச்சி இருக்குது; ஹோட்டலில் சாப்பிடவே பயமா இருக்கு’- அதிர்ச்சி கிளப்பிய ஆரணி டிஎஸ்பி!

`எலி இருக்குது, கரப்பான் பூச்சி இருக்குது; ஹோட்டலில் சாப்பிடவே பயமா இருக்கு’- அதிர்ச்சி கிளப்பிய ஆரணி டிஎஸ்பி!

சாப்பாட்டில் கரப்பான்பூச்சி எலி தலை எல்லாம் இருப்பதால், ஹோட்டலில் சாப்பிடவே பயமாக இருக்கிறது என ஆரணி டிஸ்பி ரவிச்சந்திரன் அதிர்ச்சியை வெளிப்படுத்தினார்.

ஆரணி, பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன் துக்க நிகழ்வு ஒன்றிற்கு வந்தவர்களுக்குப் பரிமாறப்பட்ட பீட்ரூட் பொரியலில் எலியின் தலை இருந்தது. இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் ஹோட்டல் உரிமையாளருக்குத் தகவல் தெரிவித்தனர். ஆனால் அவர்கள் கண்டுகொள்ளாத காரணத்தால் உணவு ஆர்டர் செய்தவர்களின் உறவினர்கள் அந்த உணவகத்திற்கு எதிரே சாலை மறியலில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து அப்பகுதியில் பரபரப்பு நிலவியது. தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் அவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினர். மேலும் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்தனர். உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகளும் அந்த உணவகத்திற்குச் சென்று உணவு மாதிரி எடுத்து பரிசோதனைக்கு உட்படுத்தி எடுத்துச் சென்றனர். அப்போது அந்த சைவ உணவகத்தில் எலி நடமாட்டம் அதிக அளவில் இருந்ததைக் கண்டு உணவு பாதுகாப்பு அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

இந்நிலையில் ஆரணியில் இன்று ஹோட்டல் உரிமையாளர்கள் சங்க ஆலோசனைக் கூட்டம் ஆரணியில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட ஆரணி டிஎஸ்பி ரவிச்சந்திரன், “ஹோட்டல்களில் சுத்தமான சாப்பாடே கிடைப்பதில்லை. சாப்பாட்டில் கண்டதெல்லாம் செத்து கிடக்கிறது. ஒருவர் கரப்பான் பூச்சி இருக்கிறது என்கிறார். ஒருவர் பிரியாணியில் பாய்சன் இருக்கிறது என்கிறார். ஒருவர் பீட்ரூட் பொரியலில் எலி தலை இருக்கிறது என்கிறார். ஹோட்டல் நடத்துபவர்கள் எல்லாவற்றையும் சரியாகப் பார்க்க வேண்டும். எந்த பிரச்சினையா இருந்தாலும் ஸ்டேஷன்தான் வர்றாங்க. கரப்பான் பூச்சியா பிரச்சினை, எலித்தலையா பிரச்சினை, ஈ விழுந்தாலும் பிரச்சினை. வர வர ஹோட்டலில் சாப்பிடவே பயமாக இருக்கிறது” என அதிர்ச்சியூட்டினார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in