நெல் கொள்முதல் நிலையங்களில் லஞ்சப்புகார்: கண்காணிக்க ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம்

நெல் கொள்முதல் நிலையங்களில் லஞ்சப்புகார்: கண்காணிக்க ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம்

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் மூலம் விவசாயிகளிடம்  நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. விவசாயிகள் பாதிக்கப்படாமல்   குறையின்றி நெல் கொள்முதல் செய்யப்படுவதை கண்காணிக்க  மாவட்ட வாரியாக  சிறப்பு அதிகாரிகளை  நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 

டெல்டா மாவட்டங்கள் உட்பட தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலும் செப்டம்பர் 1- ம் தேதி முதல்  நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு விவசாயிகளிடம் நெல்  கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. நிரந்தர கட்டிடங்கள் உள்ள கொள்முதல் நிலையங்களில் மட்டுமே விவசாயிகளிடம் நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. 

அதிலும் ஈரப்பதத்தை காரணம் காட்டி கொள்முதல்  செய்யப்படுவது பல இடங்களில் மறுக்கப்படுகிறது.அது மட்டும் இல்லாமல் 40 கிலோ கொண்ட சிப்பம் ஒன்றுக்கு ரூபாய் 50 வரை கொள்முதல் நிலைய ஊழியர்கள் லஞ்சம் கேட்பதாகவும் கூறப்படுகிறது.

இப்படி அடுக்கடுக்காக பல குற்றச்சாட்டுகளை  விவசாயிகள் எழுப்பிய நிலையில் மாவட்டங்களில் குழு அமைத்து கொள்முதலை கண்காணிக்க வேண்டும் என்றும் விவசாயிகள் அரசுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தனர். 

இதனையடுத்து  நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் நெல் கொள்முதல்  செய்யப்படுவதை கண்காணிக்க சிறப்பு அதிகாரிகளை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. கடலூருக்கு ராஜாராமன், தஞ்சாவூருக்கு சிவஞானம், திருவள்ளூருக்கு கற்பகம், திருநெல்வேலிக்கு சங்கர் என ஒவ்வொரு மாவட்டத்திற்கும் தனித்தனியாக கண்காணிப்பு அதிகாரிகளாக ஐஏஎஸ் அதிகாரிகளை  நியமித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. 

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in