தேசிய புலனாய்வு முகமைக்கு புதிய தலைவர் நியமனம்

தேசிய புலனாய்வு முகமைக்கு புதிய தலைவர் நியமனம்

தேசிய புலனாய்வு முகமையின் ( என்ஐஏ) புதிய தலைவராக தினகர் குப்தா நியமிக்கப்பட்டுள்ளார்.

தேசிய புலனாய்வு முகமையின் புதிய தலைவராக தினகர் குப்தா நியமிக்கப்பட்டுள்ளார். இவர் 1987-ம் ஆண்டு பஞ்சாப் கேடர் அதிகாரி ஆவார். கடந்த 2024-ம் ஆண்டு மார்ச் 31-ம் தேதி வரை என்ஐஏவின் தலைவராக குப்தாவை நியமிக்க அமைச்சரவையின் நியமனக்குழு ஒப்புதல் அளித்துள்ளது.
மேலும் உள்துறை அமைச்சகத்தின் சிறப்பு செயலாளராக (உள்நாட்டு பாதுகாப்பு) ஸ்வாகர் தாஸ் நியமிக்கப்பட்டார். சத்தீஸ்கர் கேடரின் 1987-பேட்ச் ஐபிஎஸ் அதிகாரியான தாஸ், தற்போது உளவுத்துறை பணியகத்தில் சிறப்பு இயக்குநராக உள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in