44 நீதிபதிகள் நியமனத்திற்கு 3 நாளைக்குள் ஒப்புதல் தரப்படும்: மத்திய அரசு உறுதி

44 நீதிபதிகள் நியமனத்திற்கு 3 நாளைக்குள் ஒப்புதல் தரப்படும்: மத்திய அரசு உறுதி

44 நீதிபதிகள் நியமனத்துக்கு மூன்று நாட்களுக்குள் ஒப்புதல் தரப்படும் என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு உறுதி அளித்துள்ளது.

உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் நியமனம் தொடர்பாக மத்தியஅரசுக்கும், உச்ச நீதிமன்றத்துக்கும் இடையே மோதல் போக்கு ஏற்பட்டுள்ளது. உச்சநீதிமன்ற கொலிஜியம் பரிந்துரைத்த 104 நீதிபதிகளின் பட்டியல் மத்திய அரசின் ஆய்வில் உள்ளது. இந்த நிலையில், நீதிபதிகள் நியமனத்தில் தாமதம் ஏற்படுவது குறித்து, நீதிபதிகள் எஸ்கே கவுல், அபய் எஸ்.ஓகா அமர்வில் இன்று விசாரணை நடைபெற்றது.

அப்போது, உயர் நீதிமன்றங்களில் நீதிபதிகளை நியமிப்பது தொடர்பான காலக்கெடுவைக் கடைப்பிடிப்பதாக உச்ச நீதிமன்றம் கூறியது. இதையடுத்து, வழக்கின் விசாரணைக்கு ஆஜரான மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் வெங்கடரமணி, 44 நீதிபதிகள் நியமனத்துக்கு மூன்று நாட்களில் ஒப்புதல் தரப்படும் என்று உறுதி அளித்தார். இதையடுத்து வழக்கு தள்ளி வைக்கப்பட்டது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in