
2022 ம் ஆண்டுக்குரிய ’தமுஎகச கலை இலக்கிய விருது’களைப் பெற விரும்புவோர், அதற்கு தங்கள் நூல்கள், ஆவணப்படங்கள் மற்றும் குறும்படங்களை அனுப்பலாம் என தமுஎகச அறிவித்துள்ளது.
இது குறித்து தமுஎகச மாநிலத் தலைவர் மதுக்கூர் ராமலிங்கம், பொதுச் செயலாளர் ஆதவன் தீட்சண்யா ஆகியோர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:
'2022ம் ஆண்டில் வெளியானவை மட்டுமே விருதுகளுக்கு பரிசீலனைக்குரியவை. தேர்வாகும் நூல், படம் ஒவ்வொன்றுக்கும் விருதுத்தொகை ரூ.10,000/, சான்றிதழ் ஆகியவை தமுஎகச நடத்தும் விழாவில் வழங்கப்படும். நூலின் இரண்டு பிரதிகள் 2023 மார்ச் 15ம் தேதிக்குள் அஞ்சல், தூதஞ்சல் (கூரியர்) மூலம் அனுப்பப்பட வேண்டும். பரிசீலனைக்கு வரும் நூல்களைத் திருப்பி அனுப்ப இயலாது.
நூல்களை அனுப்ப வேண்டிய முகவரி: பொதுச்செயலாளர், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம், 57/1, மேலப்பெருமாள் மேஸ்திரி வீதி,(தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க அலுவலகம்) மதுரை- 625001 தொலைபேசி: 0452-2341669.
குறும்படங்கள் மற்றும் ஆவணப்படங்களின் தனிநபர் இணைய இணைப்புகளை 73730 73573 என்ற புலன எண்ணுக்கு அனுப்பிவைக்கவும்.
விருதுகள்
1. தோழர். கே. முத்தையா நினைவு விருது : தொன்மைசார் நூல்
2. கே.பி.பாலச்சந்தர் நினைவு விருது: நாவல்
3. சு.சமுத்திரம் நினைவு விருது: விளிம்புநிலை மக்கள் குறித்த படைப்பு
4. இரா. நாகசுந்தரம் நினைவு விருது: அல்புனைவு (நான் ஃபிக்ஷன்) நூல்
5. வெம்பாக்கம் ஏ.பச்சையப்பன் – செல்லம்மாள் (ப.ஜெகந்நாதன்) நினைவு விருது: கவிதைத்தொகுப்பு
6. அகிலா சேதுராமன் நினைவு விருது: சிறுகதைத்தொகுப்பு
7.வ.சுப.மாணிக்கனார் நினைவு விருது: மொழிபெயர்ப்பு
8. இராஜபாளையம் மணிமேகலை மன்றம் (கொ.மா. கோதண்டம்) விருது: குழந்தைகள் இலக்கிய நூல்
9. கு.சின்னப்பபாரதி அறக்கட்டளை விருது: மொழி வளர்ச்சிக்கு உதவும் நூல்
10. பா.இராமச்சந்திரன் நினைவு விருது: குறும்படம்
11. என்.பி.நல்லசிவம் - ரத்தினம் நினைவு விருது: ஆவணப்படம்
பின்வரும் விருதுகள் ஒவ்வொன்றுக்கும் பொருத்தமான பரிந்துரைகள் வரவேற்கப்படுகின்றன:
12. மு.சி.கருப்பையா பாரதி - ஆனந்த சரஸ்வதி நினைவு விருது:
நாட்டுப்புறக் கலைச்சுடர்
13. மக்கள் பாடகர் திருவுடையான் நினைவு விருது: இசைச்சுடர்
14. த.பரசுராமன் நினைவு விருது : நாடகச்சுடர்
15. மேலாண்மை பொன்னுச்சாமி நினைவு விருது: பெண் படைப்பாளுமை.