வீடு தேடி வராது... இனி ரேஷன் கடைகளில் கலைஞர் உரிமைத்தொகை விண்ணப்பம்!

விண்ணப்பம்.
விண்ணப்பம்.வீடு தேடி வராது... இனி ரேஷன் கடைகளில் கலைஞர் உரிமைத்தொகை விண்ணப்பம்!

கலைஞர் உரிமைத்தொகை விண்ணப்பம், டோக்கன் ஆகியவற்றை ரேஷன் கடைகளில் பெற்றுக் கொள்ளலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

திமுக தேர்தல் அறிக்கையில் அறிவித்தபடி மகளிருக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். கலைஞர் உரிமைத் தொகை என்ற பெயரில் குடும்பத்தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்பட உள்ளது.

இத்திட்டத்திற்கான விண்ணப்பம், டோக்கன்கள் ஜூலை 20-ம் தேதி முதல் ரேஷன் கடைகளில் வழங்கப்பட்டு வந்தது. தமிழ்நாட்டில் 17.18 லட்சம் குடும்ப அட்டைகள் உள்ளன. இதில் சுமார் 10 லட்சம் குடும்ப அட்டைதாரர்கள், கலைஞர் உரிமைத் தொகை பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த ஐந்து நாட்களாக கலைஞர் உரிமைத்தொகை விண்ணப்பம், டோக்கன் ஆகியவை வீடு, வீடாகச் சென்று ஊழியர்கள் வழங்கி வந்தனர் இனிமேல் விண்ணப்பம், டோக்கன் ஆகியவை ரேஷன் கடைகளில் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

எனவே, கலைஞர் உரிமைத்தொகை டோக்கன், விண்ணப்பம் கிடைக்கப் பெறாதவர்கள் சம்பந்தப்பட்ட ரேஷன் கடைகளுக்குச் சென்று அதனைப் பெற்று டோக்கனில் உள்ள தேதிப்படி பூர்த்தி செய்து விண்ணப்பத்தை அளிக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in