‘எதிர்க்கட்சி ஐபோன்களை குறிவைக்கும் அரசு ஆதரவு ஹேக்கர்கள்...’ ஆப்பிள் எச்சரிக்கையால் அலறும் எம்பிக்கள்!

எதிர்க்கட்சியினர் ஐபோன்களை குறிவைக்கும் ஹேக்கர்கள்
எதிர்க்கட்சியினர் ஐபோன்களை குறிவைக்கும் ஹேக்கர்கள்

அரசு ஆதரவு ஹேக்கர்களால் இந்தியாவின் எதிர்க்கட்சி எம்பிக்கள் பலருக்கு அபாயம் நேர்ந்திருப்பதாக, காங்கிரஸ், திரிணாமுல், சிவசேனா உள்ளிட்ட கட்சியினர் அபயக் குரல் எழுப்பி உள்ளனர்.

ஆப்பிள் நிறுவனத்தின் பிரபல தயாரிப்புகளில் ஒன்று ஐபோன். நவீன வசதிகள் மட்டுமன்றி, பாதுகாப்பு அம்சங்களுக்காகவும் சர்வதேசளவில் ஐபோன்கள் வரவேற்பு பெற்று வருகின்றன. ஆனபோதும் பிரபலங்களின் ஐபோன்களை குறிவைத்து ஹேக்கர்கள் தொடர் தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர்.

பிரியங்கா சதுர்வேதிக்கு வந்திருக்கும் ஐபோன் எச்சரிக்கை மெயில்
பிரியங்கா சதுர்வேதிக்கு வந்திருக்கும் ஐபோன் எச்சரிக்கை மெயில்

அதிலும் அரசாங்கமே ஐபோன்களை குறிவைக்கும் உளவு மென்பொருளை ஏவி எதிர்க்கட்சியினர் உள்ளிட்ட பலதரப்பினரை வேவு பார்ப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. குறிப்பாக இஸ்ரேல் தயாரிப்பான ’பெகாசஸ்’ போன்ற ஸ்பைவேருக்கு எதிராக இந்தியாவில் எதிர்க்கட்சிகள் பெரும் அமளியில் ஈடுபட்டுள்ளன.

தற்போது மீண்டும் எதிர்க்கட்சி எம்பிக்களின் ஐபோன்கள், ஹேக்கர்களின் தாக்குதல் முயற்சிக்கு ஆளாவதாக கூக்குரல்கள் எழுந்துள்ளன. இம்முறை ஐபோன்களை தயாரித்து விற்கும் ஆப்பிள் நிறுவனமே அலாரம் அடித்து எச்சரிக்கை விடுத்திருக்கிறது. காங்கிரஸ் கட்சியின் சசி தரூர், சிவசேனாவின்(உத்தவ்) பிரியங்கா சதுர்வேதி மற்றும் திரிணாமுல் காங்கிரசின் மஹுவா மொய்த்ரா உள்ளிட்ட எம்பிக்கள், ஆப்பிள் நிறுவனத்திடமிருந்து எச்சரிக்கை மின்னஞ்சல்கள் வரப்பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

தங்கள் மொபைல் சாதனங்களை, அரசு ஆதரவுடன் தாக்குபவர்கள் தொலைதூரத்தில் இருந்தபடி ஹேக் செய்ய முயற்சிப்பது குறித்து ஆப்பிள் நிறுவனத்தார் எச்சரிக்கை மெயில் அனுப்பியுள்ளதாக இவர்கள் தெரிவித்துள்ளனர். எம்பிக்கள் மட்டுமன்றி காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தியின் அலுவலகத்தில் பணிபுரியும் மூன்று பேருக்கும் இதேபோன்ற எச்சரிக்கை மின்னஞ்சல் வந்திருப்பதாக தெரிவித்துள்ளனர்.

சசி தரூர் - மஹுவா மொய்த்ரா
சசி தரூர் - மஹுவா மொய்த்ரா

தனக்கு வந்த எச்சரிக்கை மெயிலின் ஸ்கிரீன் ஷாட்டை வெளியிட்ட மஹுவா மொய்த்ரா, ’சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், ஆம் ஆத்மி கட்சியின் ராகவ் சதா, சிபிஎம் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி மற்றும் காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் பவன் கெரா’ ஆகியோருக்கும் இதே போன்ற எச்சரிக்கைகள் வந்ததாக தெரிவித்துள்ளார்.

‘இந்த தாக்குதல்கள் மூலமாக ஐபோனின் முக்கியமான தரவுகள், தகவல்தொடர்புகள் மட்டுமன்றி கேமரா மற்றும் மைக்ரோஃபோனையும் ஹேக்கர்களால் அணுக முடியும்’ என்று ஆப்பிள் அனுப்பியுள்ள மெயிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எதிர்க்கட்சியினர் மத்தியில் இந்த ஐபோன் ஹேக்கர் தாக்குதல் விவகாரம் தீவிரமாக விவாதிக்கப்பட்டு வருகிறது. விரைவில் அவை அரசியல் புயலாகவும் உருவெடுக்கக்கூடும்.

இதையும் வாசிக்கலாமே...

அதிர்ச்சி... திமுக பிரமுகர் ஓட ஓட விரட்டி கொலை!

பகீர்... 81 கோடி இந்தியர்களின் ஆதார் தரவுகள் விற்பனை...  சிபிஐ விசாரணை!

இன்றே கடைசி தேதி... 2250 காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

மைதானத்தில் வீராங்கனைக்கு முத்தமிட்ட விவகாரம்... லூயிஸுக்கு 3 ஆண்டுகள் தடை!

பரபரப்பு… பட்டாசு கடையில் பயங்கர தீ விபத்து!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in