தமிழக அரசு வழங்கிய 33 ஒப்பந்தங்கள்: சென்னையில் அதானி நிறுவன அலுவலகம் முற்றுகை!

பாசிச பாசிச எதிர்ப்பு மக்கள் முன்னணி
பாசிச பாசிச எதிர்ப்பு மக்கள் முன்னணிதமிழக அரசு வழங்கிய 33 ஒப்பந்தங்கள்: சென்னையில் அதானி நிறுவன அலுவலகம் முற்றுகை!

அதானி குழுமத்தின் சொத்துக்களை பறிமுதல் செய்ய வேண்டும் என வலியுறுத்தி சென்னையில் அதானி நிறுவன அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற பாசிச எதிர்ப்பு மக்கள் முன்னணி அமைப்பை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோரை காவல் துறையினர் கைது செய்தனர்.

சென்னை நுங்கம்பாக்கம் கதீட்ரல் கார்டன் சாலையில் பாசிச எதிர்ப்பு மக்கள் முன்னணி அமைப்பின் சார்பில் அதானி குழுமத்தின் சொத்துக்களை பறிமுதல் செய்ய வலியுறுத்தியும், பிரதமர் நரேந்திர மோடி பதவி விலகக் கோரியும் அதானி நிறுவன அலுவலகத்தை முற்றுகையிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.

பாசிச எதிர்ப்பு மக்கள் முன்னணி அமைப்பைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் அதானி, மத்திய பாஜக அரசு மற்றும் மாநில திமுக அரசு அதானி நிறுவனங்களுக்கு ஒப்பந்தத்தை வழங்கி வருவதாக  குற்றம்சாட்டி கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

முன்னதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் செய்தியாளர்களிடம் பேசியதாவது, ‘’ பங்குச்சந்தையில் மோசடி செய்து மக்களின் பணத்தை அதானி குழுமம் சூறையாடி இருக்கிறது. கடந்த 2014-ம் ஆண்டு முதல் 2020-ம் ஆண்டு வரை 63 பெரிய ஒப்பந்தங்களை அதானி குழுமத்திற்கு மத்திய பாஜக அரசு வழங்கியிருக்கிறது.

ஹிண்டர்பர்க் அறிக்கை வெளியான பின்னரும் கார்ப்பரேட்டுகளை காப்பாற்றவே மத்திய பாஜக அரசு சமீபத்திய பட்ஜெட்டில் 10 லட்சம் கோடி ஒதுக்கி இருக்கிறது என்றும் காட்டுப்பள்ளி துறைமுகம் ஒப்பந்தம் பல்வேறு மின்சார ஒப்பந்தம் என 33 ஒப்பந்தங்களை அதானி குழுமத்திற்கு திமுக அரசு வழங்கியிருப்பது கண்டிக்கத்தக்கது’’ என்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in