போதைப்பொருளுக்கு எதிரான குறும்பட போட்டி: சென்னை பெருநகர காவல்துறை அறிவிப்பு

போதைப்பொருளுக்கு எதிரான குறும்பட போட்டி: சென்னை பெருநகர காவல்துறை அறிவிப்பு

சென்னை பெருநகர காவல்துறை சார்பில் நடத்தப்படும் குறும்பட போட்டி குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

போதைப்பொருளுக்கு எதிரான இயக்கம் (Drive Against Drugs) என்ற கருப்பொருளைக் கொண்டு இந்த குறும்பட போட்டி நடத்தப்படுகிறது. இதில் கலந்து கொள்பவர்கள் 15 நிமிடத்திற்கு மிகாமல் குறும்படங்களை இயக்கி அனுப்ப வேண்டும். போதைப்பொருளால் ஏற்படும் தீமைகள் குறித்து விளக்கும் வகையில் குறும்படத்தின் கருப்பொருள் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

குறும்படத்தை வரும் ஜனவரி 20-ந்தேதிக்குள் அனுப்ப வேண்டும். வெற்றியாளர்கள் குறித்து ஜனவரி 26-ந்தேதி அறிவிக்கப்பட்டு, பிப்ரவரி 5-ந்தேதி பரிசுகள் வழங்கப்படும். முதல் 3 இடங்களைப் பெறும் வெற்றியாளர்களுக்கு பரிசுத் தொகை வழங்கப்படும். மேலும் போட்டியில் பங்கேற்கும் அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்படுவதோடு, அவர்களது குறும்படங்கள் யூ-டியூப்பில் பதிவேற்றம் செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டிருக்ககிறது.

இது தொடர்பான அறிமுக நிகழ்ச்சியில் இயக்குநர் விக்னேஷ் சிவன் கலந்து கொண்டு, குறும்பட போட்டி குறித்த அறிவிப்பை வெளியிட்டார். இந்த போட்டியில் வெற்றி பெறும் குறும்படத்தின் இயக்குநருக்கு விக்னேஷ் சிவனின் 'விக்கி பிளிக்ஸ்' நிறுவனத்தில் வாய்ப்பு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in