வருமானத்துக்கு அதிகமாக சொத்துக்குவிப்பு: திருச்சி போக்குவரத்து அதிகாரி வீட்டில் அதிரடி சோதனை

 வருமானத்துக்கு அதிகமாக சொத்துக்குவிப்பு: திருச்சி போக்குவரத்து அதிகாரி வீட்டில் அதிரடி சோதனை

திருச்சி மாவட்ட  துணை போக்குவரத்து ஆணையர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் இன்று அதிகாலை முதல் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். 

திருச்சி மாவட்ட போக்குவரத்து துறையில் துணை போக்குவரத்து ஆணையராக பணிபுரிந்து வருபவர் அழகரசு.  இவர் திருவண்ணாமலையில் வட்டார போக்குவரத்து அலுவலராக பணிபுரிந்து பதவி உயர் பெற்று திருச்சி மாவட்டத்திற்கு பணியிட மாறுதலில் வந்துள்ளார்.

தற்போது திருச்சி வட்டாரப் போக்குவரத்து கழக  பிராட்டியூர் அலுவலகத்தில் போக்குவரத்து  துணை ஆணையராக (பொறுப்பு) கடந்த ஒரு வருடமாக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் திருவண்ணாமலையில் பணியாற்றிய காலகட்டத்தில் வருமானத்திற்கு அதிகமாக இரண்டு கோடிக்கும் மேல் சொத்து சேர்த்ததாக இவர் மீது லஞ்ச ஒழிப்பு போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். அதன் பேரில்  இவர் தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் சோதனை நடத்த முடிவு செய்தனர்.

இவர் குடியிருக்கும் திருச்சி மத்திய பேருந்து நிலையம் வில்லியம் சாலையில் உள்ள அகிலா மேன்சனில் இன்று காலை முதல் திருச்சி லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி மணிகண்டன் தலைமையில் ஆய்வாளர் பாலமுருகன் சோதனை செய்து வருகின்றனர்.போக்குவரத்து துணை ஆணையர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீஸ்  சோதனை நடத்தி வருவது திருச்சியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in