அடுத்தடுத்து நடந்த என்கவுண்டர்... அதிரடி காட்டிய போலீஸார்!

ஹரியானா கலவரக் காட்சி
ஹரியானா கலவரக் காட்சி

ஹரியானா மாநிலம் நூ பகுதியில் வெடித்த வன்முறையில் ஈடுபட்ட ஒருவரை, காவல்துறையினரின் காலில் சுட்டு என்கவுண்டர் நடத்தி கைது செய்தனர். போலீசார் துப்பாக்கியால் சுட்டதில் அவருக்கு காலில் காயம் ஏற்பட்டது.

பெஹல்வான் என்ற ஒசாமா, நூவில் உள்ள ஃபெரோஸ்பூர் நாமக் கிராமத்திலிருந்து ஆலி மீயோவுக்குச் சென்று கொண்டிருந்த போது போலீஸார் கவனித்தனர். இவர் நல்ஹரில் தீ வைத்த குற்றச்சாட்டின் பேரில் தேடப்பட்டு வருபவர். இவரை சுற்றி வளைத்த போலீஸார் என்கவுண்டர் நடத்தி உயிருடன் பிடித்தனர். இவரிடமிருந்து ஒரு நாட்டுத் துப்பாக்கி , ஒரு கார்ட்ரிட்ஜ் மற்றும் ஒரு மோட்டார் சைக்கிள் ஆகியவை மீட்கப்பட்டன. ஒரு வாரத்துக்கும் மேலாக நடந்த நூ வன்முறையில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டவர்களை கைது செய்ய, போலீஸார் நடத்திய 3வது என்கவுண்டர் இதுவாகும்.

முன்னதாக செவ்வாயன்று, நூ வகுப்புவாத மோதல்களில் குற்றம் சாட்டப்பட்ட வாஸிம், டாரு பகுதியில் நடந்த என்கவுன்டரின் போது காலில் சுட்டு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். வாஷிம் தலைக்கு 25,000 ரூபாய் பரிசுத்தொகை அறிவித்திருந்தனர். அவர் மீது கொள்ளை மற்றும் கொலை தொடர்பான பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

அதுபோல ஆகஸ்ட் 15ம் தேதி இரவு நூவில் வன்முறையில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் இரண்டு கலவரக்காரர்கள் டாரு பகுதியில் ஒரு என்கவுண்டருக்குப் பிறகு கைது செய்யப்பட்டனர். பைக்கில் தப்பிச் செல்ல இருவரும் முயன்ற போது, அவர்களில் ஒருவரின் காலில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதைத் தொடர்ந்து, அவர்கள் கீழே விழுந்ததாக போலீஸார் தெரிவித்தனர்.

ஜூலை 31 அன்று விஸ்வ ஹிந்து பரிஷத் ஊர்வலம் ஒரு கும்பலால் தாக்கப்பட்ட போது நூவில் வகுப்புவாத மோதல்கள் வெடித்தன. இந்த வன்முறை பின்னர் அண்டை மாவட்டமான குருகிராமுக்கு பரவியது. இந்த வன்முறையில் 6 பேர் கொல்லப்பட்டனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in