கர்நாடகாவில் இருந்து திருநெல்வேலி, தூத்துக்குடிக்கு சிறப்பு ரயில்கள் இயக்கம்!

ரயில்
ரயில்hindu கோப்பு படம்

தசரா விடுமுறையைத் தொடர்ந்து பண்டிகை கால சிறப்பு ரயிலை அறிவித்துள்ளது ரயில்வே துறை. அதன்படி பெங்களூரு மற்றும் மைசூரில் இருந்து நெல்லை, தூத்துக்குடிக்கு சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

அதன்படி எஸ்வந்த்பூர்- திருநெல்வேலி சிறப்பு ரயில் (06565) வரும் 4 மற்றும் 11-ம் தேதி செவ்வாய்கிழமைகளில் எஸ்வந்த்பூரில் இருந்து மதியம் 12.45 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 4.30 மணிக்கு திருநெல்வேலி வந்துசேரும். மறுமார்க்கத்தில் திருநெல்வேலி-எஸ்வந்த்பூர் சிறப்பு ரயில் வரும் 5 மற்றும் 12-ம் தேதிகளில் (புதன் கிழமை) திருநெல்வேலியில் இருந்து காலை 10.40 மணிக்கு புறப்பட்டு, இரவு 11.30 மணிக்கு எஸ்வந்த்பூர் சென்று அடையும். இந்த ரயில்கள் பனஸ்வாடி, ஓசூர், தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், கோவில்பட்டி ஆகிய ரயில் நிலையங்களில் நின்றுசெல்லும்.

இதேபோல் தூத்துக்குடி- மைசூர் சிறப்புக் கட்டண ரயில் (06254) நாளை மதியம் 3 மணிக்கு புறப்பட்டு, நாளை மறுநாள் மதியம் 12.25க்கு மைசூர் சென்று அடையும். இந்த ரயில் எலியூர், மாண்டியா, பெங்களூரு, பெங்களூரு கன்டோன்மென்ட், ஓசூர், தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், கோவில்பட்டி ஆகிய ஊர்களில் நின்றுசெல்லும் என ரயில்வே துறை அறிவித்துள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in