தூத்துக்குடி- மைசூர் இடையே சிறப்பு ரயில் இயக்கம்: எந்தெந்த ஊரில் நிற்கும் தெரியுமா?

தூத்துக்குடி- மைசூர் இடையே சிறப்பு ரயில் இயக்கம்: எந்தெந்த ஊரில் நிற்கும் தெரியுமா?

ரயில் பயணிகளின் கோரிக்கையை ஏற்று தூத்துக்குடி- மைசூர் இடையே இருமார்க்கத்திலும் சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. இந்த ரயில் இயங்கும் தேதிகள் மற்றும் செல்லும் மார்க்கம் ஆகியவை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மதுரை கோட்ட ரயில்வே விடுத்துள்ள செய்திக்குறிப்பில், “மைசூரில் இருந்து வரும் 4, 11, 18-ம் தேதிகளில் அதாவது வெள்ளிக்கிழமைகளில் மதியம் 12.05க்கு தூத்துக்குடிக்கு ரயில் புறப்படும். இந்த ரயில் தூத்துக்குடிக்கு மறுநாள் காலை 5 மணிக்கு சென்று அடையும்.

இதேபோல் மறுமார்க்கத்தில் தூத்துக்குடியில் இருந்து வரும் 5, 12, 19-ம் தேதிகளில் சனிக்கிழமைகளில் மதியம் 3 மணிக்கு மைசூர் நோக்கிப் புறப்படும். இந்த ரயிலானது, மறுநாள் காலை 8.30க்கு மைசூரைச் சென்றடையும்.

இந்த ரயிலானது யெலியூர், மாண்டியா, பெங்களூரு, பெங்களூரு கன்டோன்மென்ட், ஓசூர், தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், கோவில்பட்டி ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்”எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ரயிலின் முன்பதிவும் இப்போது இணையத்தில் தொடங்கியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in