வைகுண்ட ஏகாதசி திருவிழாவை முன்னிட்டு திருச்சியில் உள்ளூர் விடுமுறை அறிவிப்பு

ஸ்ரீரங்கம்
ஸ்ரீரங்கம்

திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோயில் வைகுண்ட ஏகாதசி திருவிழாவை முன்னிட்டு ஜன.2-ம் தேதி திருச்சி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோயில் வைகுண்ட ஏகாதசி திருவிழா நடைபெறுவதை முன்னிட்டு ஜன.2-ம் தேதியன்று திருச்சி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் தெரிவித்துள்ளார்.

அன்றைய தினம் திருச்சியிலுள்ள தமிழ்நாடு அரசின் அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கும் விடுமுறை பொருந்தும்.  ஆயினும், பள்ளி மற்றும் கல்லூரி தேர்வுகள் நடைபெறுவதில் இந்த விடுமுறை பொருந்தாது. இந்த விடுமுறையை ஈடு செய்யும் வகையில் 7.1.2023  சனிக்கிழமை அன்று வேலை நாள்  என்று திருச்சி கலெக்டர் பிரதீப்குமார் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in