கடனுக்கு புதுத்துணி கொடுக்காததால் ஆத்திரம்: கடையை தீ வைத்து எரித்த குமரி வாலிபர்!

கடனுக்கு புதுத்துணி கொடுக்காததால் ஆத்திரம்: கடையை தீ வைத்து எரித்த குமரி வாலிபர்!

தீபாவளி பண்டிகையின் போது கடனுக்கு புதுத்துணி கொடுக்காத துணிக்கடைக்கு வாலிபர் நேற்று இரவு தீவைத்த அதிர்ச்சி சம்பவம் கன்னியாகுமரியில் நடந்துள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம், மார்த்தாண்டம் அருகில் உள்ள புளியங்விளாகத்தைச் சேர்ந்தவர் ஸ்ரீகுமார். இவர் மார்த்தாண்டம் மார்க்கெட் பகுதியில் துணிக்கடை நடத்தி வருகிறார். அதேபகுதியைச் சேர்ந்த ஷாஜி என்பவர் தீபாவளி அன்று புதுத்துணியை ஸ்ரீகுமாரிடம் கடனாகக் கேட்டுள்ளார். தனக்கு பணம் கிடைக்கும்போது அவற்றைத் திருப்பித் தருவதாகவும் அவர் கூறினார். ஆனால் ஸ்ரீகுமார், கடனுக்கு துணிகளைத் தருவதில்லை எனச் சொன்னார். இதனால் ஷாஜி கடும் கோபம் அடைந்தார்.

இந்த முன்விரோதத்தில் நேற்று இரவு மார்க்கெட் பகுதிக்குச் சென்ற ஷாஜி, ஸ்ரீகுமாரின் கடைக்குத் தீவைத்தார். இதைப்பார்த்த அப்பகுதிவாசிகள் விரைந்து சென்று தீயை அணைத்தனர். இருந்தும், அதற்குள் முன்பகுதியில் தொங்கவிட்டிருந்த பெட்சீட், கைலிகள் போன்றவை எரிந்தன. இதுகுறித்து ஸ்ரீகுமார், மார்த்தாண்டம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீஸார், மாயமான ஷாஜியைத் தேடிவருகின்றனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in