ஊருக்கு ஒரு கோயில்: இந்து மத நம்பிக்கையைப் பாதுகாக்க 3,000 கோயில்களைக் கட்டுகிறது ஆந்திர அரசு!

ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன்
ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன்ஊருக்கு ஒரு கோயில்: இந்து மத நம்பிக்கையைப் பாதுகாக்க 3,000 கோயில்களைக் கட்டுகிறது ஆந்திர அரசு!

ஆந்திராவில் உள்ள ஒவ்வொரு கிராமத்திலும் கோயில் இருப்பதை உறுதி செய்வதற்காக 3000 கோயில்கள் கட்டும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. அறநிலையத் துறையின் கீழ் 978 கோயில்கள் கட்டும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.

முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் வழிகாட்டுதலின் பேரில், இந்து மதத்தைப் பாதுகாக்க இந்த முயற்சி அறிவிக்கப்பட்டுள்ளது என்று ஆந்திர துணை முதல்வரும், அறநிலையத்துறை அமைச்சருமான கோட்டு சத்தியநாராயணா கூறினார். அவர், "இந்து நம்பிக்கையை பெரிய அளவில் பாதுகாக்கவும் பரப்பவும், நலிந்த பிரிவினரின் உள்ள பகுதிகளில் இந்து கோயில்கள் கட்டும் பணி தொடங்கப்பட்டுள்ளது. திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் ஸ்ரீ வாணி அறக்கட்டளை கோயில்கள் கட்டுவதற்காக தலா ரூ.10 லட்சம் ஒதுக்கீடு செய்துள்ளது. 1,330 கோயில்களின் கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. மேலும் 1,465 கோயில்கள் இந்த பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன. அதேபோல், ஒரு சில சட்டமன்ற உறுப்பினர்களின் கோரிக்கையின் பேரில், மேலும் 200 கோயில்கள் கட்டப்படும். மீதமுள்ள கோயில்களின் கட்டுமானப் பணிகள் மற்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் மேற்கொள்ளப்படும்” என்றார்.

அறநிலையத்துறையின் கீழ் 978 கோயில்கள் கட்டும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருவதாகவும், ஒவ்வொரு 25 கோயில்களின் பணிகள் ஒரு உதவி பொறியாளரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

சில கோயில்களை புதுப்பிக்கவும், கோயில்களில் பூஜைகள் நடத்தவும் ஒதுக்கப்பட்ட ரூ.270 கோடி நிதியில் ரூ.238 கோடி நிதி இதுவரை விடுவிக்கப்பட்டுள்ளது. இதேபோல், இந்த நிதியாண்டில் ஒரு கோயிலுக்கு ரூ.5,000 வீதம் தூப தீப நைவேத்தியத்துக்காக ஒதுக்கப்பட்ட ரூ.28 கோடி நிதியில் ரூ.15 கோடி செலவழிக்கப்பட்டுள்ளது. தூப தீப திட்டத்தின் கீழ், 2019 க்குள் 1,561 கோயில்கள் மட்டுமே பதிவு செய்யப்பட்டன, இது இப்போது 5,000 ஆக அதிகரித்துள்ளது என்று அமைச்சர் சத்தியநாராயணா கூறினார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in