இரவு நேர ஊரடங்கு ரத்து!- ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அறிவிப்பு

ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன்
ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன்

கரோனா பரவல் குறைந்து வரும் நிலையில் இன்று முதல் இரவு நேர ஊரடங்கு ரத்து செய்யப்படுவதாகவும், அதே நேரத்தில் மாஸ்க் அணியாவிட்டால் அபராதம் விதிக்கப்படும் என்றும் ஆந்திர மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி கூறியுள்ளார்.

இந்தியாவில் கரோனா 3வது அலை கடந்த மாதம் வேகமாக பரவியது. இதையடுத்து, பல்வேறு மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதோடு, வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகயில் வழிபாட்டு தலங்கள் திறக்கவும் தடை விதிக்கப்பட்டது. ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதன் காரணமாக, கரோனா பரவல் குறைந்து வந்தது. இதையடுத்து, பல்வேறு மாவட்டங்களில் இரவு ஊரடங்கு ரத்து செய்யப்பட்டுவிட்டன. ஆந்திராவில் கரோனா பரவல் குறையாத நிலையில் அங்கு இரவு நேர ஊரடங்கு அமலில் இருந்தது.

இந்நிலையில், கடந்த சில நாட்களாக கரோனா பரவல் மாநிலத்தில் குறைந்து வரும் நிலையில், இன்று முதல் இரவு ஊரடங்கு ரத்து செய்யப்படுவதாக மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அறிவித்துள்ளார். அதே நேரத்தில், பொது இடங்களுக்கு செல்பவர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். முகக்கவசம் அணியாதவர்களுக்கு 100 ரூபாய் அபராதம் விதிக்கப்படும். நிறுவனம் மற்றும் கடைகளில் பணியாற்றும் ஊழியர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும், விதிகளை மீறினால் 10 ஆயிரம் முதல் 25 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும். இந்த உத்தரவுகள் வரும் 28ம் தேதி வரை அமலில் இருக்கும் என்றும் முதல்வர் தெரிவித்துள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in