'அவதார் 2' படம் பார்த்துக்கொண்டிருந்த நபர் மாரடைப்பால் மரணம்: ஆந்திராவில் அதிர்ச்சி

'அவதார் 2' படம் பார்த்துக்கொண்டிருந்த நபர் மாரடைப்பால் மரணம்: ஆந்திராவில் அதிர்ச்சி

ஆந்திர மாநிலம் காக்கிநாடா மாவட்டத்தில் உள்ள பெத்தபுரம் நகரில் சமீபத்தில் வெளியான ‘அவதார் 2’ படத்தைப் பார்த்துக்கொண்டிருந்த நபர் ஒருவர் மாரடைப்பால் உயிரிழந்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.

காக்கிநாடாவை சேர்ந்த லட்சுமிரெட்டி ஸ்ரீனு, சமீபத்தில் வெளியான 'அவதார் 2' படத்தைப் பார்ப்பதற்காக தனது சகோதரர் ராஜுவுடன் பெத்தபுரத்தில் உள்ள திரையரங்கிற்குச் சென்றார். படத்தை ஆர்வத்துடன் பார்த்துக் கொண்டிருந்த ஸ்ரீனு திடீரென சரிந்து விழுந்தார். அவரது தம்பி ராஜூ உடனடியாக அவரை பெத்தபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். ஆனால், அங்கு அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். உயிரிழந்த லட்சுமிரெட்டி ஸ்ரீனுவுக்கு ஒரு மகள் மற்றும் ஒரு மகன் உள்ளனர்.

முன்னதாக, தைவானில் 42 வயதுடைய நபர் ஒருவர் 'அவதார்' திரைப்படத்தின் முதல் பாகம் 2010-ல் வெளியானபோது, அதனை பார்த்துக் கொண்டிருந்த சமயத்தில் மாரடைப்பால் உயிரிழந்தார். உயிரிழந்த அந்த நபருக்கு உயர் இரத்த அழுத்தம் இருந்தது. அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், "திரைப்படத்தைப் பார்த்தபோது இருந்த அதிகமான உற்சாகம் அவரது மாரடைப்பு அறிகுறிகளைத் தூண்டியது" என தெரிவித்தனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in