சனி பகவானை தரிசிக்க வந்த ஆந்திர சிறுமி: திருநள்ளாறில் பெற்றோர் கண்முன்னே நேர்ந்த துயரம்

நள தீர்த்த குளம்
நள தீர்த்த குளம்

திருநள்ளாறு கோயிலுக்கு வந்த ஆந்திராவைச்  சேர்ந்த சிறுமி  கோயில் திருக்குளமான நள தீர்த்தத்தில் குளிக்கும்போது வழுக்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டம் திருப்பதி அடுத்த கோரலுக்குண்டா பகுதியை சேர்ந்தவர் சக்கரபாணி. இவர் அப்பகுதியில்  ஆட்டோ ஓட்டி வருகிறார். திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோயிலுக்கு வரவேண்டும் என்பது அவரை நீண்ட நாள் விருப்பம். அந்தப் பகுதியில் உள்ளவர்கள் ஒன்று சேர்ந்து திருநள்ளாறு செல்வதற்கு திட்டமிட்டதை அறிந்த சக்கரபாணி அவர்களுடன் தாமும் இணைந்து கொண்டார். சக்கரபாணி மனைவி சுசீலா, எட்டாம் வகுப்பு படிக்கும் மகள்  கீர்த்தனா (12) ஆகியோருடன் திருநள்ளாறுக்கு புறப்பட்டு வந்துள்ளனர்.

அவர்கள் மூவர் உட்பட 34 பேர் இரண்டு வாகனங்களில்  வந்துள்ளனர்.  கோயிலுக்கு செல்வதற்கு முன்னதாக நள தீர்த்தத்தில் குளிப்பதற்காக நேற்று மாலை சக்கரபாணி, அவரது மனைவி சுசிலா மற்றும் மகள் கீர்த்தனா ஆகியோர் சென்றுள்ளனர். கீர்த்தனா குளத்தில் குளிப்பதற்காக இறங்கிய போது படிக்கட்டுகளில் எண்ணெய் மற்றும் பாசி படர்ந்து கிடந்ததால் அதில் காலை வைத்து வழுக்கி சிறுமி கீழே விழுந்துள்ளார். இதில் பலத்த காயமடைந்த சிறுமி கீர்த்தனா நீரினுள் மூழ்கி உள்ளார். இதை சற்றும் எதிர்பார்க்காத சிறுமியின் பெற்றோர் உடனே சிறுமியை மீட்க முற்பட்டனர். 

அதற்குள் சிறுமி  நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்து வந்த தீயணைப்பு துறையினர் மற்றும் திருநள்ளாறு காவல் ஆய்வாளர் அறிவுச்செல்வம் மற்றும் போலீஸார் நீரில் மூழ்கி உயிரிழந்த சிறுமியின் உடலை மீட்டு  பரிசோதனைக்காக காரைக்கால் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.கோயிலுக்கு ஆன்மிகப் பயணம் வந்த ஆந்திரக் குடும்பத்தினர் தங்கள் மகளை இழந்து கதறியது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in