நெல்லையில் சாலை விபத்தில் சிக்கிய அரசு ஊழியர் குடும்பம்: ஆந்திர ஐயப்ப பக்தர் பலி

நெல்லையில் சாலை விபத்தில் சிக்கிய அரசு ஊழியர் குடும்பம்: ஆந்திர ஐயப்ப பக்தர் பலி

திருநெல்வேலியில் நடந்த சாலைவிபத்தில் சிக்கி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்த ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த ஐயப்ப பக்தர் சிகிச்சைப் பலனின்றி பரிதாபமாக உயிர் இழந்தார்.

ஆந்திர மாநிலம், அனந்தபுரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சுப்புராயிடு(41). இவர் ஆந்திர மாநில மின்வாரியத்தில் அரசு ஊழியராக உள்ளார். சுப்புராயிடுவும், அவரது குடும்பமும் மாலை போட்டு விரதம் இருந்து சபரிமலைக்கு வந்து தரிசனம் செய்தனர். சபரிமலை தரிசனம் முடித்துவிட்டு இவர்கள் கன்னியாகுமரிக்கும் சுற்றுலா வந்தனர். அங்கு சுற்றிப்பார்த்துவிட்டு நெல்லை புறவழிச்சாலை வழியாக ஆந்திராவுக்குத் திரும்பிக் கொண்டு இருந்தனர்.

இவர்களது கார் பாளையங்கோட்டை டி.வி.எஸ் நகர் மேம்பாலம் வழியாகச் சென்றபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்தது. இதில் தடுப்புச் சுவரில் மோதி சுப்புராயுடு குடும்பத்தைச் சேர்ந்த அனைவருமே காயம் அடைந்தனர். இதில் சுப்புராயுடு மட்டும் படுகாயம் அடைந்தார். அவர் திருநெல்வேலியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு இருந்தார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று நள்ளிரவு சுப்புராயுடு பரிதாபமாக உயிர் இழந்தார். சபரிமலைக்கு சென்ற ஐயப்ப பக்தர் உயிர் இழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in