`மேலும் ஒரு பெரிய விவகாரத்தை விரைவில் அம்பலப்படுத்துவோம்'- அதானி குழுமத்தை அதிரவைக்கும் ஹிண்டன்பர்க்

அதானி- ஹிண்டன்பர்க்
அதானி- ஹிண்டன்பர்க் `மேலும் ஒரு பெரிய விவகாரத்தை விரைவில் அம்பலப்படுத்துவோம்'- அதானி குழுமத்தை அதிரவைக்கும் ஹிண்டன்பர்க்

அதானி குழுமம் முறைகேட்டில் ஈடுபட்டதாக ஆய்வறிக்கை வெளியிட்ட நிலையில் ஹிண்டன்பர்க் அடுத்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரதமர் மோடியின் நண்பரான அதானி குழுமம் போலி நிறுவனங்களைத் தொடங்கி மோசடியில் ஈடுபட்டதாகவும், நிறுவனப்பங்குகளின் விலையை செயற்கையாக உயர்த்தி முதலீட்டாளர்களை ஏமாற்றியதாகவும் அமெரிக்காவைச் சேர்ந்த ஹிண்டன்பர்க் நிறுவனம் வெளியிட்ட ஆய்வறிக்கை இந்தியாவை அதிரவைத்தது. இதற்கு அதானி குழுமம் 413 பக்கங்களைக் கொண்ட மறுப்பு அறிக்கையை வெளியிட்டது. அதில், “ஹிண்டன்பர்க் ஆய்வறிக்கை பொய்யானது, உள்நோக்கம் கொண்டது. அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் நிறைந்தது. அமெரிக்க நிறுவனங்கள் பலனடைய வேண்டும் என்பதற்காக பொய்யான தகவல் ஹிண்டன்பர்க் அறிக்கையில் சேர்க்கப்பட்டுள்ளது. இதை குறிப்பிட்ட ஒரு தனியார் நிறுவனம் மீதான தாக்குதல் என்று கருத முடியாது. இந்திய ஒருமைப்பாடு, இந்திய நிறுவனங்களின் தரம், இந்தியாவின் வளர்ச்சி மற்றும் எதிர்கால இலக்கு ஆகியவற்றுக்கு எதிரான திட்டமிட்ட தாக்குதல்" என்று கூறப்பட்டிருந்தது.

இதனிடையே, அதானி குழுமம் குறித்த அமெரிக்காவின் ஹிண்டன்பர்க் அறிக்கையின் உண்மை நிலை குறித்து விசாரணை குழு ஒன்றை அமைக்க கோரி வழக்கறிஞர் விஷால் திவாரி என்பவர் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொதுநல மனுவின் விசாரணை நிலுவையில் இருந்து வருகிறது.

இந்த நிலையில், ஹிண்டன்பர்க் ஆய்வு நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில், மேலும் ஒரு பெரிய விவகாரத்தை விரைவில் அம்பலப்படுத்தப்போவதாக அதிரடியாக அறிவித்துள்ளது. அதானி குழுமம் முறைகேட்டில் ஈடுபட்டதாக ஆய்வறிக்கை வெளியிட்ட நிலையில் ஹிண்டன்பர்க் அடுத்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது மத்திய அரசுக்கு மேலும் சிக்கலை ஏற்படுத்தும் என்று தெரிகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in