அன்புஜோதி ஆசிரமம் வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்!

அன்புஜோதி ஆசிரமம்
அன்புஜோதி ஆசிரமம்அன்புஜோதி ஆசிரமம் வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்!

விழுப்புரம் மாவட்டம் அன்புஜோதி ஆசிரமத்தின் பாலியல் அத்துமீறல் மற்றும் பலர் காணாமல் போனது தொடர்பான வழக்கை, சிபிசிஐடிக்கு மாற்றி தமிழக டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவிட்டுள்ளார்.

விழுப்புரம் மாவட்டம், குண்டலப்புலியூர் கிராமத்தில் இயங்கி வந்த அன்பு ஜோதி ஆசிரமத்தின் காப்பகத்தில் இருந்து, திருப்பூரை சேர்ந்த ஜபருல்லா உள்பட 53 பேர், பெங்களூரில் உள்ள ஆசிரமத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

அவர்களில் 15 பேர் அங்கிருந்து தப்பிச் சென்றதாக கூறப்பட்டது. இந்நிலையில், ஜபருல்லாவின் உறவினர்கள் விழுப்புரத்தில் உள்ள ஆசிரமத்திற்குச் சென்று கேட்டபோது, ஜபருல்லா உள்ளிட்டோர் தப்பி விட்டதாக தெரிவித்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள், சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்திருந்தனர்.

அதன் அடிப்படையில் காவல் துறையினர் விசாரணை நடத்தியபோது, ஆசிரமத்துக்கு முறையான அனுமதி பெறப்படவில்லை என்பது தெரிய வந்தது. மேலும், அங்கு தங்கியிருந்தவர்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தி வந்ததாகவும் புகார்கள் வந்தன. இதையடுத்து, ஆசிரமத்தில் இருந்தவர்கள் மீட்கப்பட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்

விதிமுறைகளை மீறி செயல்பட்ட அந்த காப்பகம், மாவட்ட ஆட்சியர் உத்தரவுப்படி மூடப்பட்டது. இந்த வழக்கில் ஆசிரமம் உரிமையாளர் உட்பட 5 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

இந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்ற வேண்டும் என இடதுசாரி அமைப்புகள் ஆர்ப்பாட்டம் நடத்திய நிலையில் வழக்கினை சிபிசிஐடிக்கு மாற்றி தமிழக டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவிட்டுள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in