சிபிசிஐடி விசாரித்தால் மட்டுமே உண்மை வெளிவரும்: அன்புஜோதி ஆசிரமம் விவகாரத்தில் மாதர் சங்கம் கொந்தளிப்பு

மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்அன்பு ஜோதி ஆசிரமம்; சிபிசிஐடி விசாரணைக் கோரி மாதர் சங்கம் ஆர்ப்பாட்டம்

’’ விழுப்புரம் மாவட்டம் அன்புஜோதி ஆசிரமம் விவகாரத்தை சிபிசிஐடி விசாரித்து குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

விழுப்புரம் அன்புஜோதி ஆசிரமம் வழக்கை சிபிசிஐடிக்கு மாற்ற வேண்டும் என வலியுறுத்தி இன்று தமிழகம் முழுவதும் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை முகப்பேரில், விழுப்புரம் அன்புஜோதி ஆசிரமத்தை அரசு கையகப்படுத்த வேண்டும், தமிழகம் முழுவதும் ஆசிரமங்கள், காப்பகங்கள், முதியோர் இல்லங்கள் குறித்து ஆய்வு செய்ய சிறப்புக்குழு அமைக்க வேண்டும்.

அனுமதியின்றி அன்புஜோதி ஆசிரமம் செயல்பட அனுமதித்த சமூக நலத்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்கள், ‘’ அன்புஜோதி ஆசிரமம் விவகாரத்தை சிபிசிஐடி விசாரித்தால் மட்டுமே உண்மை நிலை வெளிவரும். அந்த ஆசிரமம் அனுமதியின்றி இயங்கியுள்ளது. ஆனால் அதனை சமூகநலத்துறை அதிகாரிகள் கண்டுக் கொள்ளாமல் இருந்துள்ளனர். இந்த விவகாரத்தில் அதிகாரிகள் உட்பட அனைவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in