ஓட்ட இயலாத பேருந்து; ஆர்.டி.ஓ அலுவலகத்தில் நிறுத்திய ஓட்டுநர்; உயிருக்கு ஆபத்து விளைவிக்க முயல்வதாக புகார்!

நாகர்கோயில் பேருந்து நிலையம்
நாகர்கோயில் பேருந்து நிலையம்

பழுதான அரசு பேருந்தை இயக்க சொன்னதால் கடுப்பான ஓட்டுநர் அந்த பேருந்தை வட்டார போக்குவரத்து அலுவலகம் முன் நிறுத்தி புகார் செய்ததால் பரபரப்பு நிலவியது.

தமிழக அரசு போக்குவரத்து கழகத்தின் கீழ் உள்ள ராணித்தோட்டம் ஒன்றாவது பணிமனையை சேர்ந்த பேருந்து ஒன்று திருநெல்வேலி-நாகர்கோயில் வழித்தடத்தில் இயக்கப்பட்டு வருகிறது. கடந்த ஒன்றரை ஆண்டாக இந்த பேருந்தினை பெர்க்மான்ஸ் என்ற ஓட்டுநர் இயக்கி வருகிறார்.

இந்தநிலையில் இந்த பேருந்து கடந்த சில நாட்களாக பாதி வழியிலேயே பழுதாகி நின்று விடும் நிலையில் இருந்துள்ளது. இது குறித்து போக்குவரத்து கழக அதிகாரிகளிடம் தெரிவித்தும் பேருந்தினை பழுது நீக்க முன்வரவில்லை. இதனிடையே இந்த பேருந்தினை நாகர்கோயிலில் இருந்து திருவண்ணாமலைக்கு பயணிகளை ஏற்றி செல்ல அனுப்பியுள்ளனர்.

திருவண்ணாமலை சென்றுவிட்டு அங்கிருந்து நாகர்கோயில் திரும்பும் வழியில் பேருந்தினை இயக்க முடியாத அளவிற்கு சிரமம் ஏற்பட்டுள்ளது. இதனால் கடுப்படைந்த ஓட்டுநர் பெர்க்மான்ஸ், காலாவதியான இந்த பேருந்தை நாகர்கோயில் வடக்கு வட்டார போக்குவரத்து அலுவலகம் முன்பு நிறுத்திவிட்டு அங்கிருந்த அதிகாரியிடம் பேருந்தின் நிலை குறித்து புகார் கொடுத்துள்ளார்.

இயக்க முடியாத பேருந்தை இயக்க வைத்து அதில் பயணிக்கும் பயணிகளின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையிலான பேருந்தின் பழுது நீக்க வலியுறுத்தி அதன் ஓட்டுநர் புகார் அளித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in