`அந்த தாத்தா என்னிடம் தவறாக நடந்து கொண்டார்': சிறையில் தள்ளிய துணிச்சல் சிறுமி!

`அந்த தாத்தா என்னிடம் தவறாக நடந்து கொண்டார்':  சிறையில் தள்ளிய துணிச்சல் சிறுமி!

கடைக்குச் சென்ற சிமியிடம் தவறாக நடந்து கொண்ட 60 முதியவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

ஹைதராபாத் போவனப்பள்ளி பகுதியைச் சேர்ந்தவர் பாஷா(60). கடை வைத்துள்ளார். இவரது வீட்டிற்கு அருகே வசிக்கும் சிறுமி நேற்று இரவு கடைக்குச் சென்றுள்ளார். அந்த சிறுமியிடம் பாஷா தகாத முறையில் நடந்து கொண்டதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுமி, தனது பெற்றோரிடம் கூறினார். இதையடுத்து அவரது பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில், போவனப்பள்ளி போலீஸார் வழக்குப் பதிவு செய்து பாஷாவை இன்று கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in