‘50 ஆயிரம் தந்தால் தான் உங்கள் மகன் பிணத்தை தருவோம்’ : லஞ்சம் கொடுக்க பிச்சை எடுக்கும் வயதான தம்பதி!

‘50 ஆயிரம் தந்தால் தான் உங்கள் மகன் பிணத்தை தருவோம்’ : லஞ்சம் கொடுக்க பிச்சை எடுக்கும் வயதான தம்பதி!

பிஹாரில் மகனின் சடலத்தை மீட்க அரசு மருத்துவமனைக்கு 50 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கொடுக்க வீதி, வீதியாக வயதான தம்பதி பிச்சை எடுக்கும் காட்சி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இந்த காட்சி காண்போரை கண் கலங்க வைத்துள்ளது.

பிஹார் மாநிலம், சமஸ்திபூரைச் சேர்ந்தவர் மகேஷ் தாக்கூர். இவரது மகன் சில நாட்களுக்கு முன்பு காணாமல் போனார். அவரை மகேஷ் தாக்கூரும், அவரது மனைவியும் பல்வேறு இடங்களில் தேடினர்.

இந்த நிலையில், அவரது மகேஷ் தாக்கூரின் மகன் உடல், சமஸ்திபூர் சதர் அரசு மருத்துவமனையில் இருப்பதாக போலீஸார் மூலம் தகவல் கிடைத்தது. அங்கு போய் தங்கள் மகனின் உடலை வழங்க வேண்டும் என்று மகேஸ் தாக்கூர் தம்பதி கேட்டுள்ளது. ஆனால், அங்கு இருந்த ஊழியர்," 50 ஆயிரம் ரூபாய் தந்தால்தான், உங்கள் மகன் உடலை தருவேன்" என்று கூறியுள்ளார்." ஏழையான நாங்கள் இவ்வளவு தொகை தரமுடியாது" என்று மகேஷ் தாக்கூர் கூறியுள்ளார். ஆனால், மருத்துவமனை ஊழியர் ஏற்கவில்லை என்று கூறப்படுகிறது.

இதனால் தங்கள் மகனின் உடலை மீட்க லஞ்சம் கொடுப்பதற்காக மகேஷ் தாக்கூரும், அவரது மனைவியும் வீதி, வீதியாக பிச்சை எடுக்க ஆரம்பித்தனர். இந்த காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக வருகிறது. இந்த காட்சி பார்ப்போரை கண்கலங்க வைத்துள்ளது.

இதுகுறித்து மருத்துவமனையின் சிவில் சர்ஜன் எஸ்.கே.சௌத்ரி நேற்று கூறுகையில்,” இந்த சம்பவம் மனித குலத்திற்கு நேர்ந்த அவமானம். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளி யாராக இருந்தாலும் கடுமையான தண்டனையை எதிர்கொள்வார்கள்” என்று கூறினார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in