ரத்தக்கறையுடன் சாலையில் கிடந்த துணி... நாய்களால் சிதைக்கப்பட்ட சிசு: உசிலம்பட்டியில் நடந்த கொடூரம்

ரத்தக்கறையுடன் சாலையில் கிடந்த துணி... நாய்களால் சிதைக்கப்பட்ட சிசு: உசிலம்பட்டியில் நடந்த கொடூரம்

பிறந்து சிலமணி நேரமே ஆன சிசுவை சாலையோரம் வீசிச் சென்ற அவலம் உசிலம்பட்டி அருகே நடந்துள்ளது, குழந்தையின் உடலை மீட்டு காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி - தேனி ரோட்டில் இன்று காலை ரத்தக் கறையுடன் துணி ஒன்று கிடந்துள்ளது. மேலும், அதனை சில நாய்கள் கடித்து இழுத்துக் கொண்டிருந்தன. இதைக் கண்ட பொதுமக்கள் சந்தேகமடைந்து காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர்.

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த உசிலம்பட்டி நகர் காவல்துறையினர் நாய்களிடமிருந்து ரத்தக் கறையுடன் கிடந்த துணியை எடுத்து பார்த்தனர். அதில், பிறந்து சிலமணி நேரமே ஆன சிசு கிடந்தது தெரியவந்தது. மேலும், சிசுவை நாய்கள் கடித்து சிதைத்திருந்தன.

தொடர்ந்து, சிதைந்த நிலையில் இருந்த சிசுவின் உடலை மீட்ட காவல்துறையினர் உடற்கூராய்விற்காக உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சிசுவை சாலையோரம் வீசிச் சென்ற நபர் யார்? என்ன காரணத்திற்காக வீசி சென்றனர்? என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in