சட்டென்று தீப்பிடித்து எரிந்த எலக்ட்ரிக் பைக்; அதிஷ்டவசமாக உயிர்தப்பிய வாகன ஓட்டி!

தீப்பிடித்து எரியும் எலக்ட்ரிக் பைக்
தீப்பிடித்து எரியும் எலக்ட்ரிக் பைக்சட்டென்று தீப்பிடித்து எரிந்த எலக்ட்ரிக் பைக்; அதிஷ்டவசமாக உயிர்தப்பிய வாகன ஓட்டி!

சென்னையை அடுத்த ஆவடி மார்கெட் பகுதியில் வந்துக் கொண்டிருந்த இருசக்கர வாகனம் திடீரென தீப்பற்றி எரிந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

சமீபகாலமாக எலக்ட்ரிக் பைக்குகள் அதிகளவில் தீப்பிடித்து எரிவது வாடிக்கையாக வருகிறது. சென்னையை அடுத்த ஆவடி மார்கெட் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ். இவர் அதேபகுதியில் பேட்டரிகளை வாங்கி கடைகளுக்கு விற்பனை செய்து வருகிறார். அவர் கடந்த ஆண்டு எலக்ட்ரிக் பைக் ஒன்றை வாங்கியுள்ளார்.

இந்த நிலையில் அவர் பணி விஷயமாக ஆவடி மார்க்கெட்டிற்கு வந்த போது அவரது பேட்டரி இருசக்கர வாகனம் தீடீரென தீப்பற்றி எரிந்தது, வாகனத்தை சுரேஷ் ஒட்டி கொண்டு சென்ற போது வாகனத்தின் பின் பகுதியில் லேசாக புகை வந்தது. அப்போது அவர் உடனடியாக சுதாரித்துக் கொண்டு வாகனத்தை நிறுத்தியுள்ளார். சற்று நேரத்தில் வாகனம் மளமளவென தீப்பிடித்து எரிந்தது. உடனடியாக அவர் பொதுமக்கள் உதவியுடன் வாகனத்தை தண்ணீர் ஊற்றி அணைக்க சுரேஷ் முயற்சி செய்துள்ளார்.

ஆனாலும் தீயைக் கட்டுப்படுத்த முடியாததால் தீயணைப்பு துறைக்கு அருகில் உள்ளவர்கள் தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்து அணைத்தனர். வெயில் தாக்கம் அதிகமாக இருந்ததால் அல்லது மின்சாரம் உரசல் ஏற்பட்டதால் இந்த விபத்து ஏற்பட்டதா என போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடும் வெயில் நேரங்களில் எலக்ட்ரிக் வாகனங்களை பயன்படுத்துவதை தவிர்க்குமாறு போலீஸார் பொதுமக்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in