மனைவி மீது அளவு கடந்த அன்பு: இறந்த சோகத்தில் விஷம் குடித்து உயிரை மாய்த்த சித்த வைத்தியர்

மனைவி மீது அளவு கடந்த அன்பு: இறந்த சோகத்தில் விஷம் குடித்து உயிரை மாய்த்த சித்த வைத்தியர்

கன்னியாகுமரி மாவட்டத்தில் பாரம்பர்ய முறையில் சித்த வைத்தியம் செய்துவந்தவர் மனைவி இறந்த துக்கத்தில், அவரது இறப்பு செய்தி தெரிந்ததுமே விஷம் அருந்தினார். ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்றுவந்தவர் இன்று உயிர் இழந்தார்.

கன்னியாகுமரி மாவட்டம், வில்லுக்குறி அருகில் உள்ள குதிரைபந்திவிளை பகுதியையைச் சேர்ந்த செல்வ ஜார்ஜ்(77) பாரம்பரிய முறையில் சித்த வைத்தியம் செய்துவந்தார். நண்பர்கள், தெரிந்தவர்களின் அழைப்பின் பேரில் அருகாமைப் பகுதிகளுக்கும் சென்று வைத்தியம் செய்துவந்தார். இவரது மனைவி மரியதங்கத்தின்(72) மீது இவருக்கு நல்ல பாசம் உண்டு. இந்நிலையில் திடீர் உடல் நலக்குறைவால் கடந்த மாதம் 23-ம் தேதி மரிய தங்கம் உயிர் இழந்தார்.

அவரது உடலை அடக்கம் செய்ய உறவினர்கள் தயாராகினர். அப்போது செல்வ ஜார்ஜ் தானும் இறந்துவிடுவேன் எனவும், இரண்டு குழிகளாகத் தயார் செய்யுங்கள் எனவும் சொன்னார். உறவினர்கள் மன வருத்தத்தில் சொல்வதாக நினைத்தனர். ஆனால் மனைவி இறந்த துயரத்தில் செல்வ ஜார்ஜ் விஷம் அருந்தியுள்ளார். அவர் மயங்கிய நிலையில் குடும்பத்தினர் மீட்டு நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு சிகிச்சைப் பலனின்றி செல்வ ஜார்ஜ் உயிர் இழந்தார். இதுகுறித்து தக்கலை போலீஸார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in