அறுந்து விழுந்த மின்சார கம்பி... பற்றி எரிந்த ஆட்டோ: பறிபோன 8 தொழிலாளர்களின் உயிர்கள்

அறுந்து விழுந்த மின்சார கம்பி... பற்றி எரிந்த ஆட்டோ: பறிபோன 8 தொழிலாளர்களின் உயிர்கள்

ஆட்டோ மீது மின்சாரம் பாய்ந்த 8 தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவம் ஆந்திராவில் நடந்துள்ளது.

ஆந்திர மாநிலம், சத்யசாய் மாவட்டத்தில் உள்ள சிலகொண்டையா பல்லி கிராமத்தை சேர்ந்த தொழிலாளர்கள் 8 பேர் இன்று காலை விவசாய பணிக்காக ஆட்டோவில் சென்று கொண்டிருந்தனர். அப்போது, கொண்டம்பள்ளி அருகே ஆட்டோ சென்று கொண்டிருந்தபோது உயர் மின் அழுத்த கம்பி அறுந்து விழுந்தது. இதில், ஆட்டோவில் மின்சாரம் பாய்ந்து பற்றி எரிந்தது. ஆட்டோவில் இருந்தவர்கள் மீதும் மின்சாரம் பாய்ந்ததால் தப்பிக்க முடியாமல் உடல் கருகி உயிரிழந்தனர்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த காவல்துறையினர், உயிரிழந்தவர்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். வேலைக்கு சென்ற தொழிலாளர்கள் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in