8 ஆயிரம் கொடுத்தால் மின் இணைப்பில் பெயர் மாற்றம்: லஞ்ச ஒழிப்புத்துறையிடம் சிக்கிய உதவி மின் பொறியாளர்

8 ஆயிரம் கொடுத்தால் மின் இணைப்பில் பெயர் மாற்றம்: லஞ்ச ஒழிப்புத்துறையிடம் சிக்கிய உதவி மின் பொறியாளர்

மின் இணைப்பு பெயர் மாற்றத்திற்கு 8 ஆயிரம்  லஞ்சம் வாங்கிய உதவி மின் பொறியாளர்  கடலூர் லஞ்ச ஒழிப்புத்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடலூர் கம்மியம் பேட்டை மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் செல்வகுமார் (49). எலக்ட்ரிக்கல் கான்ட்ராக்டரான  இவர், தான் வேலை செய்துள்ள  2 கடைகள் மற்றும் 2 வீடுகளுக்கு மின் இணைப்பு பெயர் மாற்றத்திற்காக விண்ணப்பித்து ஆன்லைன் மூலம் கட்டணம் செலுத்தியுள்ளார். அதனைத் தொடர்ந்து கடலூர் திருப்பாதிரிப்புலியூரில் உள்ள மின்சார வாரிய அலுவலகத்திற்கு சென்று, அந்த அலுவலகத்தில் பணியாற்றி வரும் உதவி மின் பொறியாளர் சசிகுமாரை அணுகி பெயர் மாற்றம் செய்து தர கேட்டுள்ளார். 

அப்போது சசிகுமார் ஒரு மின் இணைப்பு பெயர் மாற்றத்துக்கு தலா 2 ஆயிரத்து 500 வீதம் 4 இணைப்புகளுக்கும் 10 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார். ஆனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத செல்வகுமார், இதுகுறித்து கடலூர் லஞ்ச ஒழிப்பு த்துறையினரிடம் புகார் செய்துள்ளார். அதனையடுத்து லஞ்ச ஒழிப்புத்துறையினரின் அறிவுரையின்படி  ரசாயனம் தடவிய 8 ஆயிரத்துடன் இன்று மின்சார வாரிய அலுவலகத்திற்கு சென்ற செல்வகுமார், அங்கிருந்த  உதவி மின் பொறியாளர் செல்வகுமாரிடம் பணத்தை கொடுத்துள்ளார். 

அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு த்துறையின் கூடுதல் டிஎஸ்பி தேவநாதன் தலைமையிலான போலீஸார் செல்வகுமாரை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர். மேலும் அவரை கடலூர் மின்துறை கண்காணிப்பு பொறியாளர் அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று அங்கிருந்து  முக்கிய ஆவணங்களை கைப்பற்றினர். இந்நிலையில் உதவி மின் பொறியாளர் செல்வகுமார் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்து வைத்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில், புதுச்சேரி சண்முகாபுரம், விபிசிங் நகரில் உள்ள அவரது வீட்டிலும் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை மேற்கொண்டனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in