ஷூவிற்குள் சீறிய நாகப்பாம்பு; பதறியடித்து ஓடிய வாலிபர்: வைரல் வீடியோ

ஷூவிற்குள் சீறிய நாகப்பாம்பு; பதறியடித்து ஓடிய வாலிபர்: வைரல் வீடியோ

ஷூவிற்குள் இருந்து நாகப்பாம்பு ஒன்று சீறியதால் பதறியடித்து ஓடியுள்ளார் வாலிபர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.

கர்நாடக மாநிலம், மைசூரில் வாலிபர் ஒருவர் வெளியே செல்வதற்காக தனது ஷூவை போட வந்துள்ளார். அப்போது, ஷூவிற்குள் பாம்பு இருப்பதை பார்த்து பதறியடித்து ஓட்டம் பிடித்துள்ளார். இதையடுத்து, பாம்புபிடி வீரருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

சம்பவ இடத்துக்கு வந்த பாம்புபிடி வீரர், ஒரு கம்பியை எடுத்து ஷூவிற்குள் இருந்த பாம்பை தட்டினார். அப்போது, நாகப்பாம்பு ஒன்று சீறி படமெடுத்தது. இதைப் பார்த்து அங்கிருந்த பொதுமக்கள் பதறினர். ஆனால், அந்த பாம்புபிடி வீரர் நாகப்பாம்பை ஒரு பிளாஸ்டிக் டப்பாவில் போட்டு அடைத்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in