பந்தயத்தில் சீறிப்பாய்ந்த கார்; தலைகீழாக கவிழ்ந்து உயிரிழந்த வீரர்: பதை பதைக்கும் சிசிடிவி காட்சி

பந்தயத்தில் சீறிப்பாய்ந்த கார்; தலைகீழாக கவிழ்ந்து உயிரிழந்த வீரர்: பதை பதைக்கும் சிசிடிவி காட்சி

ஸ்ரீபெரும்புதூர் அருகே கார் ரேஸில் பங்கேற்ற வீரர் விபத்தில் சிக்கிய உயிரிழந்தார். தற்போது சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

சென்னை தேனாம்பேட்டையை சேர்ந்தவர் குமார். இவர், காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள தண்டலத்தில் ஹோட்டல் நடத்தி வருகிறார். கார் ரேஸ் வீரரான குமார், பல்வேறு போட்டிகளில் பங்கேற்று பரிசுகளை வென்றிருக்கிறார். இந்த நிலையில் ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள இருங்காட்டுக்கோட்டை மைதானத்தில் நேற்று நடைபெற்ற கார் ரேஸில் பங்கேற்று இருக்கிறார். 36 கிலோ மீட்டர் கார் ரேஸில் குமார் பங்கேற்றபோது மின்னல் வேகத்தில் வந்த அவரது கார் கட்டுப்பாட்டை இழந்து தலைக்குப்புற கவிழ்ந்தது.

இதில் பலத்த காயமடைந்த குமார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் நேற்று உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து ஸ்ரீபெரும்புதூர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் விபத்து குறித்த சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in